Show all

சவுதியின் ஆப்செர் செயலி: பெண்கள் பாதுகாப்பு குறித்ததே! பெண்கள் மீதான அடக்குமுறைக்கான செயலியே! நடுநிலையில் கூகுள்

23,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: ஆப்செர் என்ற செயலி, சவுதி அரேபியாவில் இருக்கும் ஆண்கள், பெண்களின் நடவடிக்கைகளைக் கண்காணிக்க உதவுகிறது. இந்தச் செயலி பற்றிய புகார்களைத் தொடர்ந்து அதை விசாரித்த கூகுள், ஒப்பந்தங்களை எந்தவிதத்திலும் இந்த செயலி மீறவில்லை என்பதால், அதை கூகுள் விளையாட்டு அங்காடியிலிருந்து நீக்க முடியாது என தெரிவித்துள்ளது.

கலிபோர்னியாவைச் சேர்ந்த சில அரசியல் தலைவர்களும் இந்தச் செயலியை நீக்க வேண்டும் என நிர்பந்தித்திருந்தனர். இந்நிலையில், ஆப்பிள் நிறுவனம் ஆப்செர் செயலியை ஆராய்ந்து வருகிறது.  ஆனால் இன்னமும் ஆப்பிளின் செயலிகள் அங்காடியிலிருந்து ஆப்செரை தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.

கூகுள் மற்றும் ஆப்பிளின் செயல்பாடுகளும், பதில்களும் அதிருப்தி அளிப்பதாக அமெரிக்க கீழவை பிரதிநிதி ஜாக்கி ஸ்பையர் தெரிவித்துள்ளார். ஆப்செரை நீக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்த தலைவர்களில் இவரும் ஒருவர். 

சவுதி அரேபிய அரசாங்கத்தின் ஆதரவுடன் இயங்கும் ஆப்செர், அடக்குமுறைக்கான செயலியாக செயல்படுவதாக பல பெண்கள் உரிமை அமைப்புகளின் விமர்சனங்களை சந்தித்துள்ளது. முதன்மையாக இந்த செயலி, சவுதி குடிமகன்கள், அரசின் சேவைகளை பெறுவதற்காகவே வடிவமைக்கப்பட்டுள்ளது. ஆனால் பெண்களின், புலம் பெயர்ந்து வேலை செய்பவர்களின் நடவடிக்கைகளையும் அவர்கள் எல்லைக்கடவுத் தகவல்களை வைத்து கண்காணிக்க உதவுகிறது. அவர்கள் எங்கு பயணப்படுகிறார்கள், எவ்வளவு நேரப் பயணம் உள்ளிட்ட தகவல்களுடன் அவர்கள் எங்கு செல்ல வேண்டும், செல்லக் கூடாது என கட்டுப்பாடுகளையும் விதிக்கலாம்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,084.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.