23,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று பதினோராம் வகுப்பு பொதுத் தேர்வு தொடங்குகிறது. பள்ளிகள் அளவில் நடத்தப்பட்ட இந்த தேர்வு கடந்த ஆண்டு முதல் பொதுத் தேர்வாக நடத்தப்பட்டு வருகிறது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 8.21 லட்சம் மாணவ, மாணவிகள் தேர்வு எழுதுகின்றனர். ஏற்கனவே தேர்ச்சி பெறாத 84 ஆயிரம் பேர் பழைய பாடத்திட்டத்தில் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதற்காக, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 2,914 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தேர்வு மையங்களை ஆய்வு செய்ய 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன. பொது தேர்வில் காப்பி அடிக்கும் மாணவர்களைப் பறக்கும்படையினர் கண்டுபிடித்தால், சம்பந்தப்பட்ட தேர்வு அறையின் கண்காணிப்பாளருக்கும் கவனஅறிக்கை அனுப்ப தேர்வாணையம் உத்தரவிட்டுள்ளது. -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,084.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.