Show all

வரலாற்றுச் சிறப்பு மிக்க நடிகை குசலகுமாரி இன்று காலமானார்! எம்ஜிஆர்-சிவாஜி நடித்த ஒரே படமான கூண்டுக்கிளி கதைத்தலைவி

23,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: தமிழ்த் திரையுலகின் இரு துருவங்களாக இருந்த மக்கள் திலகம் எம்ஜிஅர் மற்றும் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் ஆகிய இருவரும் நடித்த ஒரே படம் கூண்டுக்கிளி. இந்தப் படம் வெளியானபோது இருதரப்பு ரசிகர்களிடையே திரையரங்கில் மோதல் ஏற்பட்டதால் அதன்பின்னர் இருவரும் இணைந்து நடிக்கவில்லை

இந்த நிலையில் இந்தப் படத்தில் நடித்த கதைத்தலைவிகளில் ஒருவரான குசலகுமாரி இன்று காலமானார். தமிழில் இவர் பராசக்தி, கொஞ்சும் சலங்கை, ஹரிச்சந்திரா உள்பட பல படங்களில் முதன்மை வேடங்களில் நடித்து தனது நடிப்புத்திறமையால் ரசிகர்களை கவர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ்த்; திரைப்படங்கள் மட்டுமின்றி தெலுங்கு திரைப்படங்களிலும் பிரேம் நசீர், நாகேஸ்வரராவ் உள்பட பல முன்னணி நடிகர்களுடன் நடித்தவர் குசலகுமாரி என்பது குறிப்பிடத்தக்கது

வறுமையில் வாடி வாடிய நடிகை குசலகுமாரிக்கு தமிழக அரசின் சார்பில் மாதம் ரூ.5,000 நிதியுதவிக்கான உத்தரவை அப்போதைய முதல்வர் ஜெயலலிதா வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,084.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.