Show all

வளமிக்க ஆஸ்திரேலியா, வறட்சிலும் வறுமையிலுமா! இணையத்தில் பரவி அதிர்ச்சியுட்டும் புகைப்படங்கள்

20,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5120: வெள்ளை ஆஸ்திரேலியா கொள்கை என்பது ஆஸ்திரேலியாவுக்கு வெள்ளையரல்லாத இனத்தவர்கள் குடியேற அனுமதி மறுக்கப்பட்ட ஆஸ்திரேலிய அரசின் கொள்கைகளுக்கு கொடுக்கப்பட்ட பெயராகும்.

எழுபது ஆண்டுகள் ஆஸ்திரேலியாவில் நிலை பெற்றிருந்த இந்தக் கொள்கை விலக்கிக் கொள்ளப்பட்டு நாற்பது ஆண்டுகள் ஆகி விட்டன. 

ஆஸ்திரேலியக் கூட்டமைப்பின் முதலாவது நாடாளுமன்றத்தினால் எவ்வித எதிர்ப்பும் இன்றி நிறைவேற்றப்பட்ட முதலாவது சட்ட மூலங்களில் ஒன்று வெள்ளை ஆஸ்திரேலியா கொள்கையாகும். இரண்டாம் உலகப் போரை அடுத்து வந்த ஆஸ்திரேலிய அரசாங்கங்கள் படிப்படியாக இக்கொள்கையைத் தளர்த்தி வந்தன. இதன் படி முதலில் பிரித்தானியரல்லாத வெள்ளை இனத்தவர்களும் பின்னர் வெள்ளையரல்லாதோரும் அனுமதிக்கப்பட்டனர். கடந்த நாற்பது ஆண்டுகளுக்கு முன்னம்,  வெள்ளை ஆஸ்திரேலியா கொள்கை முற்றாக ஒழிக்கப்பட்டது. இனவாரியாக தொழில்களுக்குத் தெரிவு செய்யப்படுதல் சட்டபூர்வமாகத் தடை செய்யப்பட்டது.

குறைந்த ஊதியத்திற்கு வெள்ளையினம் அல்லாதோர் நாட்டில் குடியேறி நாட்டின் வளமையைக் குலைத்து விடுவார்கள் என்று நம்பி இப்படியொரு சட்டத்தைப் போட்ட அந்த ஆஸ்திரேலியா, 800 ஆண்டுகளாக இல்லாத வறட்சியையும் வறுமையையும் சந்தித்து வருகிறது என்பதை எப்படி நம்மால் நம்ப முடியும்?

உலகம் தோன்றியதில் இருந்து இப்போது வரை இல்லாத அளவிற்கு ஆஸ்திரேலியாவில் மிகப்பெரிய வறுமையும், வறட்சியும் ஏற்பட்டு இருக்கிறது.

பொதுவாக இந்திய மக்களுக்கு ஆஸ்திரேலியர்களின் விளையாட்டுத் திறமையும், கங்காரும் மட்டுமே ஆஸ்திரேலியா என்று கூறியதும் நினைவில் வரும். ஆனால், உண்மையில் தற்போதைய ஆஸ்திரேலிய நிலை மிக மிக மோசமாக இருக்கிறது.

தென்னாப்பிரிக்கா எப்படி மோசமான நீர் வறட்சியை சந்தித்து இருக்கிறதோ அதே அளவிற்கு மோசமான வறட்சியை சந்தித்து இருக்கிறது, ஆஸ்திரேலியா. இதை பற்றிய புகைப்படங்கள் வெளியாகி உள்ளன.

உலகம் தோன்றியதில் இருந்து இப்போது வரை இல்லாத அளவிற்கு ஆஸ்திரேலியாவில் வறட்சி ஏற்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. ஆவணங்களின் படி, கடந்த 800 ஆண்டுகளில் அங்கு ஏற்பட்ட வறட்சியிலேயே இதுதான் மிகவும் மோசமான வறட்சி என்று கூறப்படுகிறது. கடந்த 30 மாதங்களாக அங்கு மிக கடுமையான வெயில் அடிக்கிறது.

கடந்த 22 மாதமாக அங்கு கொஞ்சம் கூட மழை பெய்யவில்லை என்று கூறப்படுகிறது. சுமார் 95 விழுக்காடு கிழக்கு ஆஸ்திரேலிய பகுதிகளில் எல்லாம் மோசமாக வறட்சியை சந்தித்து காய்ந்து போய்விட்டதாக கூறப்படுகிறது. அதேபோல், அங்கு நிலத்தடி நீர் 1000 அடிகளுக்கு கீழ் குறைந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. .

இதனால் அங்கு பொருட்களின் விலை மிகவும் அதிகம் ஆகியுள்ளது. அதேபோல் நோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சேரும் மக்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. அதே சமயம் ஆஸ்திரேலியாவில் பங்கு வர்த்தகம் கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு மோசமான வீழ்ச்சியை சந்தித்து இருக்கிறது.

ரியூட்டர்ஸ் பத்திரிக்கையின் புகைப்படக்காரர் டேவிட் கிரே எடுத்த புகைப்படங்கள் இணையத்தில் பரவி அதிர்ச்சியை அளித்து வருகின்றன. ஆஸ்திரேலிய வறுமையை அவர் கண் முன்னே கொண்டு வந்துள்ளார்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,870.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.