20,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5120: தெலுங்கானா முதல்வரும் தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சியின் தலைவருமான சந்திரசேகர ராவ், மோடியை நேற்று சந்தித்தார். சுமார் ஒரு மணி நேரம் வரை நடந்த இந்த சந்திப்பின் போது எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தல் குறித்து ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. மோடியுடனான சந்திப்பிற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய சந்திரசேகர ராவ், பாராளுமன்றத் தேர்தலுக்கு முன் பாஜகவுடன் கூட்டணி வைப்பதால் எங்கள் கட்சிக்கு எந்த பலனும் இல்லை. தேர்தலுக்கு பின் ஒருவேளை பாஜக ஆட்சி அமைக்க போதிய பெரும்பான்மை இல்லாமல் போனால் அப்போது கூட்டணி வைப்போம் என்றார். -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,870.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



