20,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5120: நடுவண் இடைநிலைக் கல்வி வாரியப் பாடத்தில் குடும்ப அமைப்பு குறித்த விளக்கம் ஒன்றை பார்த்துவிட்டு, கிரிக்கெட் வீரர் சேவாக் தன்னுடைய கடுமையான விமர்சனத்தை பதிந்து இருக்கிறார். கிரிக்கெட் மட்டுமில்லாமல் அரசியல், சமுதாயம் குறித்து கீச்சு பதிவிட்டு வருகிறார் கிரிக்கெட் வீரர் சேவாக். இந்தநிலையில் நடுவண் இடைநிலைக் கல்வி வாரியப் பாடத்தில்; குடும்ப அமைப்பு குறித்த விளக்கம் ஒன்றை பார்த்துவிட்டு சேவாக் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார். பாடம் ஒன்றில் உள்ள விளக்கத்தில், கூட்டு குடும்பம் என்பது முதியவர்கள் முதல் குழந்தைகள் வரை எல்லோரும் ஒன்றாக இருப்பது. கூட்டு குடும்பத்தில் நிம்மதியாக இருக்க முடியாது என்று பாடம் அமைந்துள்ளது. இதைத்தான் அவர் பகிர்ந்து கண்டனம் செய்துள்ளார். மேலும், இதுபோல நிறைய மோசமான விசயங்கள் பள்ளி புத்தகத்தில் உள்ளது. இதை படித்து பார்த்து வெளியிடும் கல்;வியாளர்கள் சரியான முன் தயாரிப்புகளில் ஈடுபடுவதே இல்லையா? என்று கேட்டுள்ளார். அவரது கருத்துக்கு பலரும் ஆதரவு தெரிவித்து வருகிறார்கள். -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,870.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



