Show all

பணக்காரர் ஆவது என்பது, அறிவோ கலையோ அல்ல- விருப்பம்!

பணக்காரர் ஆவது என்பது அறிவோ கலையோ அல்ல- விருப்பம் என்கிறது திருக்குறள். உலகினரில் பலர் பிழைக்க நாடோடியாக நமது நாவலந்தேயம் (இந்தியா) வந்திருந்த நிலையில், பணக்காரர் ஆகும் விருப்பத்தில் வணிக முன்னெடுப்பில் பல நாடுகளைக் கண்டவர்கள்தாம் நம் தமிழ் முன்னோர். 

05,ஐப்பசி,தமிழ்த்தொடராண்டு-5122: பணம் ஏன் பெரும் பணக்காரர்களிடமே சேர்கிறது? ஏழைகள் எப்போதும் ஏழைகளாகவே இருக்கிறார்கள். பணக்காரர்கள் அவ்வளவு பெரிய அறிவாளிகளா? பணம் சம்பாதிப்பது அவ்வளவு பெரிய கலையா? என்கிற கேள்வி பலரிடம் உள்ளது. அறிவாளிகள் பணக்காரர்களாகவும் இருக்கிறார்கள் ஏழைகளாகவும் இருக்கிறார்கள். கலைஞர்களும் அப்படித்தான்.

1. உடலுழைப்புக் கூலியாக இருப்பவர்கள் காலம் முழுவதும் ஏழையாகவே இருக்க வேண்டியதுதான்.
2. நிருவாகக் கூலியாக இருப்பவர்கள் படிப்பு திறமையை வளர்த்து கொண்டால் சிறு நிறுவனங்களில் சென்னையில் 12000 மாதச் சம்பளம் பெறுவதிலிருந்து கூகுள் தலைவர் சுந்தர் பிச்சை வரை முன்னேறலாம்.
3. வேலையாட்களை வைத்து சொந்தமாகத் தொழில் செய்கிறவர்கள் வணிகம் செய்கிறவர்கள் மட்டுமே அனுபவத்தின் அடிப்படையில் அந்தத் தலைமுறையிலேயோ அடுத்த தலைமுறையிலேயோ பெரிய பணக்காரர் ஆகிறார்கள். 
4. பணக்காரர் ஆவதற்கு நல்லவன் கெட்டவன் என்கிற தகுதியோ, அறிவாளி முட்டாள் என்கிற தகுதியோ காரணம் அல்ல. 
5. பணக்காரர் ஆக வேண்டும் என்கிற எண்ணம் இருக்கிறவர்கள் பணக்காரர் ஆகிறார்கள். தன்னால் பணக்காரன் ஆக முடியாது என்று நம்புகிறவர்கள் ஏழையாகவே இருக்கிறார்கள். அறிவாளி முட்டாள், நல்லவன் கொட்டவன் பணக்காரனிலும் இருப்பான், ஏழையிலும் இருப்பான். 

அறத்தாறு இதுவென வேண்டா சிவிகை
பொறுத்தானோடு ஊர்ந்தான் இடை

பல்லக்கை தூக்கிச் செல்கிறவன், பல்லக்கில் அமர்ந்து செல்கிறவன் இவர்களுக்கு இடைப்பட்ட வேறுபாடு- அறத்தின் பாற்பட்டது அல்ல என்று சொல்லி, முயற்சியின் பாற்பாட்டது என்கிறார் திருவள்ளுவர். ஆக பல்லக்கில் செல்ல முடியும் என்று நினைக்கிறவன் பல்லக்கில் செல்கிறான். பல்லக்கு சுமப்பது தனக்கு அமைந்த அறம் என்று கருதுகிறவன் முயற்சியை இழக்கிறான் என்கிறார் திருவள்ளுவர்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.