Show all

ஆதரவுத் தளங்களையே முனுமுனுக்க வைக்கும் மோடி காணொளிகள்!

நரேந்திர மோடி உரைக்கு சில நிமிடங்களிலேயே வலையொளியில் ஆயிரக் கணக்கில் எகிறிய வெறுப்புகள்

05,ஐப்பசி,தமிழ்த்தொடராண்டு-5122: இந்தியாவில் இது திருவிழா காலம் என்பதால், இந்தக் காலக்கட்டத்தில் கொரோனா பரவல் மேலும் தீவிரமாகக் கூடும் என்று நரேந்திர மோடி எச்சரித்த காணொளி நேற்று மாலை பாரதிய ஜனதா கட்சியின் அதிகாரப்பாட்டு வலையொளி பக்கத்தில் நேரடியாக ஒளிபரப்பப்பட்டதாகத் தெரியவருகிறது.

நரேந்திர மோடி பேசத் தொடங்கிய சில நிமிடங்களிலேயே 4,500க்கும் அதிகமான முறை அந்த காணொளியில் வெறுப்பு பதிவு செய்திருந்தனராம். இதன் காரணமாக அந்தக் காணொளியில் விருப்பு மற்றும் வெறுப்பு பித்தான் அணைத்து வைக்கப்பட்டிருந்தனவாம்.

கொரோனா பரவலுக்கு இடையேயும் ஜேஈஈ, நீட் உள்ளிட்ட தேர்வுகளை நடத்துவதற்கு இந்தியா முழுவதும் கடுமையான எதிர்ப்பு முன்னெடுக்கப்பட்ட காலக்கட்டத்தில் எதிர்ப்புகளையெல்லாம் புறக்கணித்து விட்டு மயில், நாய் போன்ற விலங்குகள் குறித்து பேசிய நரேந்திர மோடியின் காணொளிக்கு வலையொளியில் லட்சக் கணக்கில் வெறுப்புகள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. என்பதும் நினைவு கூறத்தக்கது. மக்களுக்கு கடுப்பேற்றும் வகையான இந்த முன்னெடுப்புகள் தேவைதானா பாஜகவிற்கு என்று சில ஆதரவுத் தளங்களில் இருந்தே முனுமுனுக்கப் படுகிறது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.