Show all

கொரோனா தடுப்பூசி எதிர்கொள்ளும் அறைகூவல்! பிரேசில் தன்னார்வலர் உயிரிழப்பு. ஆக்ஸ்போர்டு கொரோனா தடுப்பூசி சோதனையில்

இங்கிலாந்து நாட்டின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் தயாரித்த கொரோனா தடுப்பூசி சோதனையில் பிரேசில் தன்னார்வலர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

06,ஐப்பசி,தமிழ்த்தொடராண்டு-5122: கொரோனா தடுப்பூசி சோதனையில் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக கொரோனா தடுப்பூசி அறைகூவலைச் சந்திக்கிறது- பிரேசில் தன்னார்வலர் உயிரிழப்பின் காரணமாய்.

இங்கிலாந்து நாட்டின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் தயாரித்த கொரோனா தடுப்பூசி சோதனையில் பிரேசில் தன்னார்வலர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இங்கிலாந்து ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகமும் ஆஸ்ட்ரா ஜெனிகா நிறுவனமும் இணைந்து தயாரித்த கொரோனா தடுப்பூசி மருத்துவ பரிசோதனையில் இருந்து வருகிறது. உலக நாடுகள் பலவும் ஆஸ்ட்ரா ஜெனிகா தயாரித்த கொரோனா தடுப்பூசியை சோதனையில் வைத்திருக்கின்றன.

இந்தச்சூழலில் அந்தத் தடுப்பூசியை போட்டுக்கொண்ட பிரேசிலை சேர்ந்த தன்னார்வலர் ஒருவர் உயிரிழந்த சோகம் உலக நாடுகளை அதிர்ச்சியடையச் செய்துள்ளது. இது தொடர்பாக விளக்கம் அளித்துள்ள பிரேசில் நலங்குத்துறை ஆணையம், தன்னார்வலர் உயிரிழந்தது பற்றி விசாரணை நடைபெற்று வருவதாக தெரிவித்துள்ளது.

மேலும், தன்னார்வலர் ஒருவர் உயிரிழந்த காரணத்தால் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகமும் ஆஸ்ட்ரா ஜெனிகா நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ள கொரோனா தடுப்பூசி சோதனையை பிரேசில் நிறுத்தப்போவதில்லை எனக் கூறியுள்ளது. கொரோனா சோதனையில் ஈடுபடுவோரின் கமுக்கத்தைக் காக்கும் பொருட்டு உயிரிழந்த தன்னார்வலர் குறித்த முழு விவரங்களை பிரேசில் அரசு வெளியிட மறுத்துள்ளது.

இந்தியா, இங்கிலாந்து, சீனா, அமெரிக்கா, ரஷியா,  என உலகளவில் கொரோனா தடுப்பூசி கண்டறியும் பணிகள் மிகத் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. சோதனைக்கட்டங்களை நிறைவு செய்து விரைவில் கொரோனா தடுப்பூசியை வெளியிடுவதற்கு உலக நாடுகள் பலவும் போட்டிப்போட்டு வருகின்ற நிலையில் ஆக்ஸ்போர்டு கொரோனா தடுப்பூசி சோதனையில் பிரேசில் தன்னார்வலர் உயிரிழப்பு கொரோனா தடுப்பூசி எதிர்கொள்ளும் அறைகூவலாகப் பார்க்கப்படுகிறது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.