04,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5120: ஆப்பிரிக்க நாடான கானாவில் முகமூடி அணிந்து காணொளி ஒன்றில் தோன்றிய பெயர் குறிப்பிடாத மத போதகர் ஒருவர் கடந்த 17 ஆண்டுகளாக சாத்தானுடன் வாழ்வதாகவும் 675 சிறுவர்களை மத சடங்குகளுக்காக நரபலி கொடுத்துள்ளதாகவும் திகிலூட்டும் தகவல் வெளியிட்டுள்ளார். இந்தத் தகவலை தொடர்புடைய மத போதகரே வெளிப்படையாக தெரிவித்துள்ளது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இதுவரை சடங்குகளுக்காக 675 பேரை கொலை செய்துள்ளதாக கூறும் அவர், அதில் பெரும்பாலானோர் சிறுவர்கள் எனவும் தெரிவித்துள்ளார். இந்தச் சம்பவமானது கானாவில் எந்த பகுதியில் நடைபெற்றது, எப்போது நடைபெற்றது உள்ளிட்ட தகவல்களை அவர் வெளியிட மறுத்துள்ளார். தாம் தீய சக்தியுடன் பிறந்தவர் எனவும் தமது சக்தியை தக்கவைத்துக் கொள்ளவே நரபலி கொடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,854.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



