இந்தியத் துடுப்பாட்ட விளையாட்டில் மதச்சாயம் பூசப்படுவதாக, பாக்கிஸ்தான் முன்னாள் துடுப்பாட்ட வீரர் மொயின்கான் கூறியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. தற்போது இந்திய அணிக்கும், வீரர்களுக்கும் மத சாயம் பூசப்பட்டு வருவதாக குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது. அதாவது முகமது சமி இஸ்லாமியர் என்பதால், இலங்கைக்கு எதிரான போட்டியில் சேர்க்கப் படவில்லை, அதற்கு மோடியிடம் இருந்து வந்த உத்தரவு காரணம் என்று பாகிஸ்தான் முன்னாள் வீரர் ஒருவர் கூறி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளார். பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் மொயின் கானும், துடுப்பாட்ட (கிரிக்கெட்) ஆய்வாளர் ஒருவரும் தொலைக்காட்சி விவாதம் ஒன்றில் கலந்து கொண்டனர். அந்த விவாதத்தில் பேசிய மொயின் கான், 3 போட்டிகளில் 14 விக்கெட்டுகளை வீழ்த்தியவர் சமி. ஆனால் அப்படிப்பட்ட பந்து வீச்சாளரைத் திடீரென ஓரங்கட்டியுள்ளனர். நானாக இருந்தால் அவரை ஓரங்கட்டியிருக்க மாட்டேன். சமி தொடர்ந்து ஆடினால் அதிகமான விக்கெட் வீழ்த்தியவர்கள் பட்டியலில் முதல் 3 இடங்களுக்குள் வந்துவிடுவார். இந்திய அணி நிர்வாகத்துக்கு சமியை உட்கார வைக்க வேண்டும் என்று அழுத்தம் வந்திருக்கும் என நினைக்கிறேன். முஸ்லீம்கள் வளர்ந்துவிடக்கூடாது என்ற கொள்கையை கொண்ட பாஜக, நெருக்கடி கொடுத்துத்தான் சமியை இந்தியத் துடுப்பாட்டக் கட்டுப்பாட்டு வாரியம் ஓரங்கட்டியிருக்கும் என்று பகிரங்கமாக குற்றம்சாட்டியுள்ளார். -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல, தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,207.
23,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5121: சிறுபான்மையினரான முகமது சமியை, இலங்கைக்கு எதிரான போட்டியில் விளையாட இந்தியத் துடுப்பாட்டக் கட்டுப்பாட்டு வாரியம் அனுமதிக்கவில்லை என்று பாக்கிஸ்தான் முன்னாள் துடுப்பாட்ட வீரர் மொயின் கான் கூறியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.