Show all

மகிழ்ச்சி- 8பேர்கள் குணமடைந்துள்ளார்களா! கொரோனா தொற்றுக்குள்ளான 8பேர்கள் குணமடைந்துள்ளார்களாம். தகவல் தாய்லாந்துலிருந்து

தாய்லாந்தில் 19 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 5 பேர் இதில் மோசமான உடல் நிலையில் இருக்கிறார்கள். 8 பேர் முழுவதுமாக சிகிச்சை முடிந்து வீட்டிற்கு திரும்பி உள்ளனர். இந்த மலைப்பும், மகிழ்ச்சியுமான செய்தியை தாய்லாந்து அரசு வெளியிட்டு இருக்கிறது.

20,தை,தமிழ்தொடர்ஆண்டு-5121: கொரோனாவிற்கு தாய்லாந்து மருத்துவமனையில் பயன்டுத்தப்பட்டு வரும் மருந்து ஒன்று சிறப்பாக பலன் அளிப்பதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. உலக நாடுகளை இந்த ஆராய்ச்சி வியப்பிற்கும் மகிழ்ச்சிக்கும் உள்ளாக்கி உள்ளது. 

கொரோனா நுண்ணுயிரி தாக்குதல் காரணமாக மொத்தமாக சீனாவில் வுகன் நகரம் மூடப்பட்டுள்ளது. இந்த கொரோனா நுண்ணுயிரி தாக்குதல் காரணமாக சீனாவில் 361 பேர் பலியாகி உள்ளனர். 17201 பேர் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகிறார்கள். 

உலகின் 24 நாடுகளில் இந்த நுண்ணுயிரி தாக்குதல் பரவி உள்ளது. இந்த நிலையில் தாய்லாந்திலும் இந்த நுண்ணுயிரித் தாக்குதல் ஏற்பட்டுள்ளது. தாய்லாந்தில் மொத்தம் 35 பேர் ஐயத்தின் பெயரில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். 19 பேருக்கு இதில் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 5 பேர் இதில் மோசமான உடல் நிலையில் இருக்கிறார்கள். 8 பேர் முழுவதுமாக சிகிச்சை முடிந்து வீட்டிற்கு திரும்பி உள்ளனர். இந்த மலைப்பும், மகிழ்ச்சியுமான செய்தியை தாய்லாந்து அரசு வெளியிட்டு இருக்கிறது.

பாங்காக்கில் இருக்கும் ராஜவீதி மருத்துவமனையில், இந்த கொரோனா தொற்றுக்கு மருந்து ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதன்படி, எச்ஐவி எதிர்ப்பு மருந்து மற்றும் வழக்கமான நுண்ணுயிரிக் காய்ச்சலுக்கு அளிக்கப்படும் மருந்தை கொரோனா நுண்ணுயிருக்கி  எதிராக பயன்படுத்தி உள்ளனர். லோபினாவிர், ரிட்டோனாவிர் என்ற கலவையான மருந்தை இதற்கு பயன்படுத்தி உள்ளனர். 

இரண்டு மருந்துகளையும் கலந்து, புது மருந்தை உருவாக்கி கொடுத்துள்ளனர். 70 அகவை பெண்ணுக்கு இதை அளித்துள்ளனர். அவருக்கு உடனே குணமாகி உள்ளது. ஆம், 10 நாட்களாக இதனால் அவதிப்பட்டு வந்தவருக்கு, அந்த மருந்தை கொடுத்த மறுநாளே நோய் சரியாகி இருக்கிறது. இவர் தற்போது தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறார். 

இந்த மருந்தை வேறு யாருக்காவது கொடுக்கலாமா என்று தீவிரமாக ஆலோசனை செய்தும் வருகிறார்கள். இதே மருந்தை இன்னொரு பெண்ணுக்கும் கொடுத்துள்ளனர். ஆனால் கலவையின் அளவில் வேறுபாடு ஏற்பட்டதால், அந்த பெண்ணுக்கு ஒவ்வாமை ஏற்பட்டுள்ளது. ஆனாலும் அவரின் உடல்;நிலை தேறி வருவதாக மருத்துவர்கள் கூறுகிறார்கள். இது முழுமையான தீர்வாக இருக்க முடியாது. ஆனால் இதன் மூலம் விரைவில் கொரோனா தொற்றிற்கு நிரந்தர மருந்து கண்டுபிடிக்கப்படலாம், என்றும் கூறுகிறார்கள். தற்போது அளித்த மருந்து குறித்து அவர்கள் ஆராய்ச்சி செய்து வருகிறார்கள்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.