மனை வணிகத்தில் முதலீடு செய்து தவறான கணிப்புகளால், சில கோடிகளை நடிகை அனுஷ்கா இழந்துள்ளதாக தகவல் பரவி வருகிறது. 20,தை,தமிழ்தொடர்ஆண்டு-5121: நடிகைகள் திரைப்படத்தில் ஈட்டும் வருமானத்தை வேறு தொழில்களில் முதலீடாக மறுசுழற்சி செய்வது வழக்கம். தமன்னா இயங்கலையில் நகை வணிகம் செய்கிறார். டாப்சி திருமண நிகழ்ச்சிகளை நடத்தி கொடுக்கும் நிறுவனத்தையும், இலியானா துணிக்கடையையும், ரகுல் பிரீத்சிங் உடற்பயிற்சி நிலையங்களையும், ஸ்ரேயா அழகு நிலையத்தையும் நடத்துகிறார்கள். நயன்தாரா, அனுஷ்கா, திரிசா, சமந்தா, காஜல் அகர்வால் உள்ளிட்ட நடிகைகள் மனைவணிகத்தில் முதலீடு செய்கிறார்கள். அனுஷ்காவுக்கு மனைவணிகத்தில் பெரும்இழப்பு ஏற்பட்டுள்ளதாக தெலுங்கு பட உலகில் தகவல் பரவி உள்ளது. ஐதராபாத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் நான்கு படுக்கை அறை கொண்ட வீட்டை அனுஷ்கா வாங்கி இருந்தார். தெலுங்கானா விவகாரம் தலை தூக்கியபோது சொத்துகள் விலை இறங்கி விடும் என்று அனுஷ்காவை சிலர் பயமுறுத்தினர். இதனால் அந்த வீட்டை ரூ.5 கோடிக்கு விற்று விட்டார். வீட்டின் அப்போதையை மதிப்பு ரூ.10 கோடி என்கிறார்கள். விசாகப்பட்டினத்தில் ஏராளமான நிலங்களை வாங்கி போட்டு இருந்தார். முதல்-அமைச்சராக இருந்த சந்திரபாபு நாயுடு அமராவதியை தலைநகராக்கும் முயற்சியில் இறங்கியதால் சொத்துகள் விலை ஏறாது என்று கருதி வாங்கிய நிலங்களில் 80 விழுக்காட்டை குறைந்த விலைக்கு விற்று விட்டார். ஆனால் இப்போது விசாகப்பட்டினத்தில் நிலங்களின் விலை பல மடங்கு ஏறி இருக்கிறது. இதனால் அனுஷ்காவுக்கு பல கோடிகள் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் இதை நினைத்து அவர் கவலையில் இருக்கிறார் என்றும் கூறப்படுகிறது. தொழில் என்றால் வரவும், இழப்பும் இயல்புதானே! மக்கள் கிசுகிசுக்களை விரும்பி எதிர்பார்க்கும் கலைத்துறை என்பதால், அனுஷ்கா இழப்பிற்கு கொஞ்சம் கூடுதாலாக சுற்றியிருப்பவர்கள் கவலைப்படுகிறோம்.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



