வெளிநாட்டவர்களுக்கான ஐக்கிய அரபு அமீரகத்தின் திருமண சட்டவிதிகளின்படி முஸ்லிம் மதத்தைச் சேர்ந்த பெண் வேற்று மதத்தைச் சேர்ந்த ஆணை திருமணம் செய்து கொள்ள இயலாது என்ற விதி இருந்தும்- அரபு அமிரகம் சகிப்புத்தன்மை ஆண்டு அனுசரிக்கப்படுவதை முன்னிட்டு தனது குழந்தைக்குப் பிறப்பு சான்றிதழ் பெற்ற மலையாளி 15,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5121: பிறப்பால் மலையாளியான கிரன்பாபு- சனம் சாபூ சித்திக் என்ற முகமதியப் பெண்ணை திருமணம் செய்து கொண்டு தற்போது இருவரும் சார்ஜாவில் வசித்து வருகின்றனர். இவர்களுடைய திருமணம் மூன்றாண்டுகளுக்கு முன்பு கேரளாவில் தான் நடந்தது. -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,136.
இந்த இணையருக்குப் பிறந்த குழந்தைக்கு வரலாற்றிலேயே முதல் முறையாக ஐக்கிய அரபு அமீரக அரசு பிறப்புச் சான்றிதழ் அளித்துள்ளது.
சார்ஜாவில் வசித்து வரும் கிரன்பாபு- சனம் சாபூ சித்திக் இணையருக்கு சார்ஜாவில் கடந்த ஆண்டில் பெண் குழந்தை பிறந்தது.
இக்குழந்தைக்கு பிறப்பு சான்றிதழ் கோரி விண்ணப்பித்த போது, முகமதியர் அல்லாத தந்தைக்கும், முஸ்லிம் மதத்தைச் சேர்ந்த தாய்க்கும் பிறந்த குழந்தை என்பதால் விதிகளின்படி பிறப்பு சான்றிதழ் அளிக்க முடியாது என அதிகாரிகள் கைவிரித்துள்ளனர்.
இதனால் அறங்கூற்றுமன்றத்தில் சென்று தடையில்லா சான்று கோரி விண்ணப்பித்தார் கிரன் பாபு. இருப்பினும் பலனின்றி நான்கு மாத முயற்சி விணானது.
வெளிநாட்டவர்களுக்கான ஐக்கிய அரபு அமீரகத்தின் திருமண சட்டவிதிகளின்படி முஸ்லிம் மதத்தைச் சேர்ந்த ஆண், முஸ்லிம் இல்லாத வேறு மதத்தைச் சேர்ந்த பெண்ணை திருமணம் செய்து கொள்ளலாம். ஆனால் முஸ்லிம் மதத்தைச் சேர்ந்த பெண் வேற்று மதத்தைச் சேர்ந்த ஆணை திருமணம் செய்து கொள்ள இயலாது. இதுவே பிறப்பு சான்றிதழ் மறுப்புக்கு காரணமாகும்.
இந்நிலையில் சகிப்புத்மைக்கு முன்னுதாரன தேசமாக திகழும் முனைப்புடன் நடப்பு ஆண்டினை சகிப்புத்தன்மை ஆண்டாக அறிவித்தது ஐக்கிய அரபு அமீரகம்.
முகமதியர் அல்லாத கலாச்சார மக்கள் ஒவ்வொருவரையும் அப்படியே ஏற்றுக்கொள்ளும் விதமாக இந்த சகிப்புத்தன்மை ஆண்டு அனுசரிக்கப்படுகிறது.
இந்த நிலையில் மீண்டும் தனது குழந்தைக்கு பிறப்பு சான்றிதழ் கோரி விண்ணப்பித்தார் கிரன் பாபு, இம்முறை அவரது குழந்தைக்கு பிறப்பு சான்றிதழ் கிடைத்துள்ளது.
அவர்கள் தங்கள் குழந்தைக்கு அனாம்தா ஏசிலின் கிரன் என்று பெயர் சூட்டியுள்ளனர். தங்கள் குழந்தைக்கு மலையாளப் புததாண்டில் இந்தப் பிறப்புச் சான்றிதழ் கிடைத்ததில் மிகுந்த மகிழ்ச்சி அடைகின்றனர்.
தமிழ்ப் புத்தாண்டு அன்றுதாம் (14.04.2019) அதே நடைமுறைகளோடு மலையாளப் புத்தாண்டும் கொண்டாடப் படுகிறது. ஆனால் தங்கள் தொடர் ஆண்டு முறைக்கு கொல்லம் ஆண்டு முறை என்று பெயர் வைத்திருக்கிறார்கள் மலையாளிகள்.
அனாம்தா ஏசிலின் கிரன் என்ற அந்த 8 மாத குழந்தைக்கு பிறப்பு சான்றிதழை அமீரக அரசு கொடுத்துள்ளது வரலாற்றில் முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



