Show all

நடப்பு 'தமிழகஅச்சப்புயல்' தற்போதைய நிலையில் சென்னையிலிருந்து 900 கிமீக்கு அப்பால்! வானிலை ஆய்வு மையம்

போனி என்று பெயரிட்டு கவனிக்கப் பட்டு வருகிற 'தமிழகஅச்சப்புயல்' தற்போதைய நிலையில் சென்னையிலிருந்து 900 கிமீக்கு அப்பால், 21 கி.மீ வேகத்தில், வட மேற்கு திசை நோக்கி நகர்ந்தபடி உள்ளது. இப்புயல், புதன்கிழமை வரை இவ்வாறு நகர்ந்தபடி இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவிக்கிறது. 


16,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5121: வங்கக் கடலில் உருவான 'தமிழகஅச்சப்புயல்' இன்று தீவிர புயலாக மாறும் என்று எதிர்பார்க்கப்படுவதால், தமிழகத்தில் பேரிடர் மீட்பு படையினர் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். இப்புயல், வட மேற்கு திசை நோக்கி நகர்ந்தபடி உள்ளது. வானிலை ஆய்வு மையம் கடைசியாக கவனித்தன்படி, சென்னையிலிருந்து 910 கி.மீ தொலைவில் உள்ளதாகத் தெரிவிக்கிறது சென்னை வானிலை ஆய்வு மையம். 
இது மணிக்கு 21 கி.மீ வேகத்தில், வட மேற்கு திசை நோக்கி நகர்ந்தபடி உள்ளது. புதன்கிழமை வரை புயல் இவ்வாறு நகர்ந்தபடி இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இன்று மாலைக்குள் மேலும் வலுப்பெற்று, தீவிர புயலாக மாறும் வாய்ப்பு உள்ளது. 
அடுத்த 24 மணி நேரத்தில், இப்புயல் அதி தீவிர புயலாக் தீவிரம் பெறுவதன் காரணமாக, கேரளாவில் இன்றும், நாளையும், மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. இதேபோல வட தமிழகம் மற்றும் தெற்கு ஆந்திரா கடலோர பகுதிகளில் நல்ல மழைக்கு வாய்ப்பு உள்ளது. வியாழன் வெள்ளிக் கிழமைகளில் ஒடிசாவின் கடலோர பகுதிகளில், நல்ல மழைக்கு வாய்ப்பு உள்ளது. இதனிடையே, தென் கிழக்கு வங்கக் கடலில் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று மீனவர்கள் எச்சரிக்கப்பட்டுள்ளனர்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,137.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.