Show all

வாக்குப்பதிவு இயந்திரத்தில் தாமரை சின்னத்தில் கட்சி பெயராம்! பாஜகவிற்கு தேர்தல்ஆணையம் கருத்துப் பரப்பதலா? எதிர்கட்சிகள் புகார்

பாஜகவின் தாமரை சின்னத்துடன் பாஜக என்ற பெயரையும் சேர்த்து வாக்குப் பதிவு இயந்திரத்தில் பாஜகவுக்கு மட்டும் சிறப்புத் தகுதியாக தேர்தல் ஆணையம் தேர்தல் கருத்துப் பரப்புதல் செய்திருப்பதாக எதிர்கட்சிகள் புகார் தெரிவித்துள்ளன. தேர்தல் ஆணைய வட்டாரம் மறுக்கிறது. 

15,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5121: நாடு முழுவதும் நாடாளுமன்றத் தேர்தல்- தன்னாட்சிமிக்க நடுநிலை நிறுவனமென நாம் நம்பிக் கொண்டிருக்கிற தேர்தல் ஆணையத்தால் நடத்தப் பட்டு வருகிறது. இதுவரை 3 கட்ட தேர்தல் முடிந்துள்ளது. 4 வது கட்ட தேர்தல் நாளை நடக்கவுள்ளது. இந்நிலையில் பாஜகவின் சின்னம் குறித்து காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் தேர்தல் ஆணையத்தில் புகார் தெரிவித்துள்ளன. 
காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சியினர் அபிஷேக் சிங்வி, ஓ பிரைன் ஆகியோர் தலைமையில் ஒரு குழுவாகச் சென்று, புகார் மனு ஒன்றைத் தலைமை தேர்தல் ஆணையத்திடம் அளித்தனர். இந்தப் புகாரில்: மேற்குவங்கத்தில் பராக்பூர் தொகுதியில் மின்னணு வாக்கு இயந்திரத்தில் பொறிக்கப்பட்டுள்ள தாமரை சின்னத்தின் கீழே கட்சியின் பெயர் பாஜக என ஆங்கிலத்தில் பொறிக்கப்பட்டுள்ளது. இதுபோல் எந்த கட்சிக்கும் பெயர் குறிப்பிடப்படுவது இல்லை. எனவே இதனை உடனடியாக நீக்க வேண்டும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
இது குறித்து தேர்தல் ஆணையம் வட்டாரம் கூறியதாவது: எதிர்கட்சியினர் சொல்லும்படி இவ்வாறு எந்த எழுத்தும் இல்லை. கடந்த தேர்தலில் பாஜக சின்னம் தாமரையின் சுற்றுப்பகுதியை, பெரிது செய்ய கேட்டு கொண்டது. அதன் படி பெரிது படுத்தப் பட்டது. அதனால் கீழ்புறத்தில் லேசான தண்ணீர் திவலைகள் காணப்படும். இது எப்.பி, போன்று காட்சியளிப்பதாக சிலர் சொல்கின்றனர். ஆனால் பிஜேபி என்ற எழுத்து வாக்கு இயந்திரத்தில் இல்லை என கூறியுள்ளது.
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,136.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.