முதலீட்டாளர்கள் தங்கள் இருப்பு வைத்துக் கொள்ள விரும்பும் நிறுவனப் பங்குகளின் விலை உயரும். விற்றுத் தொலைத்தால் போதும் என்று விரும்புகிற நிறுவனப் பங்குகளின் விலை குறையும். இதுதான் பொதுவாக பங்குச் சந்தையின் போக்கு ஆகும். ஆப்பிள் நிறுவன பங்குச் சந்தை மூதலீட்டு மதிப்பு, ஓரே நாளில் 11 பில்லியன் டாலர் எகிறியது. ஆப்பிள் நிறுவனப் பங்கை முதலீட்டாளர்கள் இருப்பு வைத்துக் கொள்ள வாய்த்த விருப்பதிற்கு காரணம் என்ன? கலிபோர்னியாவில் இருக்கும் ஆப்பிள் தலைமை அலுவலகத்தின் ஸ்டீவ் ஜாப்ஸ் திரையரங்கத்தில் நடந்த ஆப்பிள் நடப்பாண்டு நிகழ்வில், இந்நிறுவனம் ஐபோன் 11, ஐபோன்11 ப்ரோ, ஐபோன் ப்ரோ மேக்ஸ், ஆப்பிள் வாட்ஸ் சீரியஸ் 5, ஐபேட் 2019, ஆப்பிள் தொலைக்காட்சி கூட்டல் மற்றும் புதிய விளையாட்டுத்; தளமான ஆப்பிள் நடைமேடை ஆகியவற்றை அறிமுகம் செய்தது. இதன் எதிரொலியாக ஓரே நாளில் ஆப்பிள் நிறுவனத்தின் சந்தை மூலதன மதிப்பு 11.43 பில்லியன் டாலர் வரையில் அதிகரித்தது. ஒரு பங்கின் விலை ஓரே நாளில் 2 டாலர் வரையில் உயர்ந்து 216.7 டாலருக்கு வர்த்தகமானது. கடந்த சில காலாண்டுகளாக ஆப்பிள் நிறுவனத்தின் விற்பனை பெரிய அளவில் குறைந்து வருகிறது. இதற்கு முதன்மைக் காரணம் விலையில் குறைவாகவும், தரத்தில் உயர்வாகவும் வெளியாகி வரும் சீன நிறுவனங்களின் மிடுக்குப்பேசிகள் தாம். சீன நிறுவனங்களின் ஆதிக்கத்தால் ஆப்பிள் மட்டும் அல்லாமல் சாம்சங் நிறுவனத்தின் வர்த்தகமும் பெரிய அளவில் பாதிக்கப்பட்டது. இந்நிலையில் ஆப்பிள் நிறுவனத்தின் இப்புதிய அறிமுகங்கள் இழந்த சந்தையை மீண்டும் பிடிக்க உதவும் என்பதாக பங்குச்சந்தையின் போக்கு தெரிவித்துள்ளது. -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல, தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,274.
27,ஆவணி,தமிழ்தொடர்ஆண்டு-5121: உலகின் முன்னணி மிடுக்குப்பேசி உற்பத்தி மற்றும் விற்பனை நிறுவனமான ஆப்பிள் செவ்வாய்க்கிழமை ஐபோன்11 பேசி வகையை அறிமுகம் செய்தது.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.