42 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு எதிர்பாராத மின்தடையால் இருளில் மூழ்கியது நியூயார்க் நகரம். 73 ஆயிரத்துக்கு மேற்பட்ட வீடுகள் மற்றும் தொழில்கள் பாதிப்பு 29,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5121: திடீரென மின்மாற்றி ஒன்று வெடித்து சிதறியதால், அமெரிக்காவின் நியுயார்க் நகரில் நேற்று மின்தடை ஏற்பட்டது. இந்த மின்தடையால், வீடுகள், வணிக நிறுவனங்கள், அரசு அலுவலகங்கள் என 73 ஆயிரம் கட்டடங்கள் இருளில் மூழ்கின. நகரவீதிகளில் இருள் கவ்வியதால், வாகன போக்குவரத்தும் தடைபட்டது. இந்த மின்தடையினால் புகழ்பெற்ற டைம்ஸ் ஸ்கொயர், சுரங்க பாதைகள் உள்ளிட்ட பகுதிகள் இருளில் மூழ்கின. பாதுகாப்பு காரணமாக சுரங்க பாதைகளைப் பயன்படுத்த வேண்டாம் என பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. மின் தடை ஏற்பட்டதால் பலர் இரவில் சாலைகளில் கூட்டம் கூட்டமாக நடந்து சென்றனர். அதிகாரிகள் விரைந்து செயல்பட்ட போதும் கூட, இந்த மின்தடை பலமணி நேரம் நீடித்திருக்கிறது. மின் தடை சரி செய்யப் பட்டு மின்சாரம் வந்தவுடன் மக்கள் வீதிக்கு வந்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். 25 மணி நேர மின்தடை சரியாக 42 ஆண்டுகளுக்கு முன்பு அங்கு நிகழ்ந்ததாம். மீண்டும் ஒரு எதிர்பாராத நீண்ட மின்தடை இதுதானாம் -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல, தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,213.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.