ஆறுமுகம், செல்பேசியை தலைக் கவசத்திற்கும் காதுக்கும் இடையே செருகி வைத்துக் கொண்டு பேசியவாறே இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது, சூளகிரியில் திடீரென்று செல்பேசி வெடித்துச் சிதறியது. 29,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5121: கிருட்டினகிரி மாவட்டம் புளியரிசி கிராமத்தை சேர்ந்த ஆறுமுகம் ஓசூருக்கு இருச்சகர வாகனத்தில் சென்றுள்ளார். ஆறுமுகம்; செல்பேசியை தலைக் கவசத்திற்கும் காதுக்கும் இடையே செருகி வைத்துக் கொண்டு பேசியவாறே இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது, சூளகிரியில் திடீரென்று செல்பேசி வெடித்துச் சிதறியது. இதில் ஆறுமுகத்தின் தலை, காது, கை பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டது. தகவல் அறிந்து வந்த சூளகிரி காவல்துறையினர், அவரை மீட்டு சிகிச்சைகாக தனியார் அவசரவண்டி மூலம் கிருட்டினகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இந்த விபத்து குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர். செல்பேசியே, விபத்துக்குக் காரணம் என்று கண்டறிப்பட்டால் அந்த செல்பேசி தயாரிப்பு நிறுவனத்தின் மீது அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல, தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,213.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.