கருப்பின பெண் ஒருவரின் கழுத்தை காவலர் ஒருவர் தனது பூஸ்ட் அணிந்த காலால் நெரிக்கும் அதிர்ச்சி சம்பவம் பிரேசிலில் அரங்கேறியுள்ளது. இந்தக் கொடூர காட்சிகள் அடங்கிய காணொளி சமூக வலைதளங்களில் தீயாகி வருகிறது. 31,ஆனி,தமிழ்த்தொடராண்டு-5122: அமெரிக்காவில் ஜார்ஜ் பிளாய்ட் என்ற கருப்பின வாலிபரின் கழுத்தை காவலர் ஒருவர் நெரித்ததில் அந்த வாலிபர் உயிரிழந்தார். அண்மையில் நிகழ்ந்த இந்தக் கொடூர நிகழ்வு, உலகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த அதிர்ச்சி சற்று அடங்கிய நிலையில், அதே போன்றதொரு காவல்துறை அடாவடி பிரேசிலில் அரங்கேறி மீண்டும் அதிர்ச்சியைக் கிளப்பி வருகிறது. பிரேசில் நாட்டின் சயோ பால் மாகாணத்தைச் சேர்ந்த 51 அகவை மதிக்கத்தக்க பெண் ஒருவர், அங்கு மதுபான கூடம் ஒன்றை நடத்தி வருகிறார். குடிப்பகத்திற்கு வரும் வாடிக்கையாளர்களை மகிழ்விக்க, ஒலிபெருக்கியில் துள்ளிசை பாடல்களை அந்த பெண்மணி ஒலிக்க செய்துள்ளார். அப்போது அந்தப் பகுதியில் ஊர்க்காவல் பணியை மேற்கொண்டிருந்த காவலர், துள்ளிசை ஒலியின் அளவை குறைக்கும்படி, குடிப்பக உரிமையாளரான பெண்ணிடம் கூறியதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப் படுகிறது. இதையடுத்து, சம்பந்தப்பட்ட இரண்டு காவலர்களையும் பணியிடை நீக்கம் செய்து, சயோ பால் மாகாண ஆளுநர் அதிரடியாக உத்தரவிட்டுள்ளார். இந்தப் பிரேசில் தற்போது கொரோனாவின் பாதிப்பில் உலகின் இரண்டாவது இடம் வகித்து வருகிறது. மூன்றாம் இடம் வகிப்பது நம்ம இந்தியா.
இதனால் ஆத்திரமடைந்த அந்தப் பெண், இரும்பு கம்பியால் தங்களை தாக்கியதாக காவலர்கள் தெரிவித்தனர். இதற்கு பதில் நடவடிக்கையாக, அந்த பெண்ணை தரையில் தலைக்குப்புற படுக்க வைத்து, அவர் கழுத்தை காலணி அணிந்த காலுடன் காவலர் ஒருவர் நெரித்துள்ளார். இந்தக் கொடூர காட்சிகள் அடங்கிய காணொளி தற்போது சமூக வலைதளங்களில் தீயாகி வருகிறது.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



