Show all

பிலிப்பைன்சில் ஒரு பெரியார்! அதிர்ச்சியில் மதவாதிகள்

24,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: நம்ம பெரியாரைப் போல- கடவுள் இருக்கிறார் என்பதை நிரூபித்தால் பதவி விலகத் தயார் என்று பிலிப்பைன்ஸ் அதிபர் ரோட்ரிகோ டுட்டெர்டே கூறியிருப்பது பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியிருக்கிறது.

டவாவோ நகரில் தொழில்நுட்பம் மற்றும் விஞ்ஞானம் சார்ந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பிலிப்பைன்ஸ் அதிபர் ரோட்ரிகோ டுட்டெர்டே, கடவுள் இருக்கிறார் என்பதற்குச் சாட்சி இருக்கிறதா? என்று கேள்வி எழுப்பினார். பிறகு அந்தக் கேள்விக்குப் பதில் அளிக்கும் வகையில், கடவுளைப் பார்க்க முடியும், பேச முடியும் என்பதை நிரூபிக்கும் வகையில் ஆதாரத்தைக் கொடுத்தால் உடனடியாகத் தான் பதவி விலகத் தயார் என்று குறிப்பிட்டிருக்கிறார்.

இதற்கு முன்பு ஏற்கெனவே கடவுளை முட்டாள் என்று கடுமையாக விமர்சித்திருந்த டுட்டெர்டே தற்போது கடவுள் இருப்பதை நிரூபித்தால் பதவி விலகத் தயார் என்று கூறியிருப்பது பெரும் அதிர்ச்சியை மதவாதிகள் முன்பு ஏற்படுத்தியிருக்கிறது.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,842.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.