Show all

உங்கள் விருப்ப நிறுவனத்தின் அதிபர் லீ குன் ஹீ காலமானார்! சாம்சங் தயாரிப்புகளை மட்டுமே விரும்பி வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு

சாம்சங் நிறுவனத்தைப் பன்னாட்டு அளவில் மிடுக்குப்பேசி, தொலைக்காட்சிகளுக்கு முன்னணி நிறுவனமாக உருவாக்கிய லீ குன் ஹீ காலமானார்.

09,ஐப்பசி,தமிழ்த்தொடராண்டு-5122: சாம்சங் நிறுவனத்தைப் பன்னாட்டு அளவில் மிடுக்குப்பேசி, தொலைக்காட்சிகளுக்கு முன்னணி நிறுவனமாக உருவாக்கிய லீ குன் ஹீ காலமானார். தற்போது அவருக்கு அகவை78.

உலக அளவில் தென்கொரிய நிறுவனமான சாம்சங் நிறுவனத்தின் மிடுக்குப்பேசிகள், தொலைக்காட்சிகள், மின்னணு தயாரிப்புகளுக்கு மிகப் பெரிய வணிகச்சந்தை உள்ளது. சாம்சங் தயாரிப்புகளை மட்டுமே விரும்பி வாங்கும் வாடிக்கையாளர்கள் நிறைய பேர்கள் உண்டு.

அந்தப் பொருள்களின் தரத்தின் காரணமாகவே மக்களிடம் சாம்சாங்குக்கு அத்தனை மதிப்பு இருந்துவருகிறது. 33 ஆண்டுகளுக்கு முன்பு தந்தையின் இறப்புக்குப் பிறகு சாம்சங் நிறுவனத்தின் பொறுப்பை ஏற்றார் லீ குன் ஹீ. லீ குன் இடைவிடாது முயற்சி செய்து சாம்சங்கை தொழில்நுட்ப உலகில் தவிர்க்க முடியாத சக்தியாக வளர்த்தெடுத்தார். 

முப்;பது ஆண்டுகளுக்கு முன்பு சாம்சங் நிறுவனம் அமெரிக்க உள்ளிட்ட நாடுகளின் முன்னணி நிறுவனங்களைத் தாண்டி வளர்ந்தது. இருபது ஆண்டுகளுக்கு முன்ப செல்பேசி உற்பத்தியில் முன்னணி நிறுவனமாக உருவாகியது. தென்கொரியாவின் பொருளாதாரத்தில் சாம்சங் முதன்மை நிறுவனமாக உள்ளது. உலக அளவில் ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சிக்கு அதிக பணம் செலவிடும் நிறுவனமாகவும் உள்ளது. 

இன்று காலையில் லீ குன் இயற்கை எய்தியதாக சாம்சங் குழுமம் அறிவித்துள்ளது. இருப்பினும், அவருடைய இறப்புக்கான காரணம் விளக்கப்படவில்லை. ஆறு ஆண்டுகளுக்கு முன்பு நெஞ்சுவலியின் காரணமாக அவருக்கு அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டிருந்தது.

அடிப்படை செல்பேசிகளில் இருந்தே தமிழ்மொழியை உள்ளிட்டு தமிழகத்தின் பாமரமக்களையும் சாம்சங் தயாரிப்பின் வாடிக்கையாளர்களாக மாற்றியது நினைவு கூறத்தக்கது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.