எல்லையில் சீனாவுடன் என்னதான் சிக்கல் என்பதை நடுவண் அரசு வெளிப்படையாக விளக்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் இராகுல்காந்தி வலியுறுத்தியுள்ளார். 16,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5122: எல்லையில் சீனாவுடன் என்னதான் சிக்கல் என்பதை நடுவண் அரசு வெளிப்படையாக விளக்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் இராகுல்காந்தி வலியுறுத்தியுள்ளார். லடாக் எல்லையில் சீனாவின் படைகள் குவிக்கப்பட்டுள்ளன. இந்தியாவுடனான யுத்தத்துக்கு தயாராகுமாறு சீனா ராணுவத்தினருக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி வருகின்றன. நான் பஞ்சாயத்துக்கு வரட்டுமா என்றும், மோடி குழப்பத்தில் இருக்கிறார் என்றும் டிரம்ப் துடித்துக் கொண்டிருக்கிறார். நடுவண் அரசும் எல்லையில் படைகளை குவித்து வருகிறது. எல்லை நிலவரம் குறித்து நடுவண் அரசு தொடர்ந்து ஆலோசனைகளை நடத்தி வருகிறது. இது தொடர்பாக தலைமைஅமைச்சர் மோடியிடம் டிரம்ப் பேசினார் என முதலில் செய்திகள் வெளியாகின. ஆனால் நடுவண் அரசு இதனை திட்டவட்டமாக மறுத்தது. இந்நிலையில் எல்லையில் என்னதான் நடக்கிறது என காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி கேள்வி எழுப்பியிருக்கிறார். தமது கீச்சுப் பக்கத்தில் இராகுல் காந்தி, எல்லை நிலவரம் குறித்து நடுவண் அரசு அமைதிகாத்து வருகிறது. எல்லையில் என்னதான் நடக்கிறது என்பதை நடுவண் அரசு வெளிப்படையாக விவரிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



