Show all

பாகிஸ்தான் புதிய அரசு! இந்தியாவிற்கு நெருக்கடி கொடுக்க தயார் படுத்திக் கொண்டிருக்கிறதா? உண்மையான தீர்வுகளை நோக்கி நகருகிறதா?

13,ஆவணி,தமிழ்தொடர்ஆண்டு-5120: பாகிஸ்தான் நாட்டில் இம்ரான் கான் தலைமையில் புதிய அரசு பதவியேற்றுள்ளது. இதில் மனித உரிமைகள் துறை அமைச்சராக ஷிரீன் மஸாரி உள்ளார்.

தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டியளித்த ஷிரீன் மஸாரி, நீண்ட காலமாக இருக்கும் காஷ்மீர் பிரச்சனைக்கு தீர்வு மாதிரி கிடைத்துள்ளது. இதற்காக பலகாலமாக உழைத்துக் கொண்டிருக்கிறேன். இதுகுறித்து இன்னும் ஒருகிழமையில் தலைமை அமைச்சர் இம்ரான் கானிடம் தெரிவிக்கப்படும் என்று தெரிவித்தார்.

இந்த மசோதா அமைச்சரவையில் பதிகை செய்யப்பட்டு ஒப்புதல் பெற நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். நடப்பு ஆய்வுகள் களத்தின் பொது இயக்குநராக மஸாரி இருக்கிறார். பாதுகாப்பு மற்றும் ராணுவம் சார்ந்த விசயங்களில் அதிக ஈடுபாடு கொண்டவர். 

இஸ்லாமாபாத்தில் உள்ள குயைத்-இ-அஸாம் பல்கலைக்கழகத்தில் பாதுகாப்பு மற்றும் நடப்பு ஆய்வுகள்; பிரிவில் பேராசிரியராக பணியாற்றியுள்ளார். மேலும் தற்போதைய ராணுவத் தலைமையுடன் நெருங்கிய தகவல தொடர்பில் இருக்கிறார். 

அண்மையில் பேட்டி ஒன்றில் கூறிய இம்ரான் கான், காஷ்மீர் உள்ளிட்ட அனைத்து விவகாரங்கள் குறித்தும் இந்தியா உடன் பேச்சுவார்த்தை நடத்த விரும்புவதாக குறிப்பிட்டிருந்தார்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,894.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.