Show all

தெலுங்கு கவிஞர் வராவர ராவ் புனேயில் கைது! இந்தியத் தலைமை அமைச்சர் மோடியைக் கொல்ல சதித் திட்டம் தீட்டினாராம்

13,ஆவணி,தமிழ்தொடர்ஆண்டு-5120: கோரேகான் பகுதியில் இடதுசாரிகளுடன் தொடர்புடையவர்களாக 5 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களின் வீடுகளில் நடத்தப்பட்ட சோதனையில், மோடி, அமீத்ஷா, ராஜ்நாத்சிங் ஆகியோரை கொல்ல சதித்திட்டம் தீட்டியது குறித்து கடிதம் சிக்கியதாம். இக்கடித்ததை எழுதியதாக, தெலுங்கு கவிஞர் வராவர ராவ் புனே காவல்துறையினரால், ஹைதராபாத்தில் கைது செய்யப்பட்டார். அதனைத் தொடர்ந்து பல்வேறு இடங்களில் சோதனை நடத்தப்பட்டு, மாவோயிஸ்ட் ஆதரவாளர்களாக மேலும் 4 பேர் கைது செய்யப்பட்டனர். 

இந்த கைது நடவடிக்கைக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார். இடதுசாரிகள் மற்றும் தலித்துகளுக்கு எதிரான நடவடிக்கை என்று அரசியல் கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன.

நாடளுமன்றத் தேர்தலுக்கான வியுகங்களை பாஜக தொடங்கி விட்டதாக இணைய ஆர்வலர்கள் கருத்து பதிவிட்டு வருகிறார்கள்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,894.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.