Show all

பாகிஸ்தானியர்கள் கோரிக்கை! பிடிபட்ட இந்தியத் தமிழ்விமானியை மரியாதையாகவும் கண்ணியமாகவும் நடத்துங்கள்

15,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: பிடிபட்டுள்ள தமிழக விமானியை பாகிஸ்தான் மரியாதையாக நடத்த வேண்டும் என முன்னாள் பாகிஸ்தான் பிரதமர் பெனசீர் பூட்டோவின் உறவினர் பாத்திமா பூட்டோ உள்பட பாகிஸ்தானியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்திய எல்லையில் போக்கு காட்டி சுற்றித் திரிந்த பாகிஸ்தான் போர் விமானங்களை: தாக்குதல் நடத்தும் நோக்கத்திற்கானதோ என்கிற தவறான கணிப்பில் இந்தியா விரட்டியடிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டது.

அப்போது நடந்த சண்டையின்போது இந்தியாவின் மிக் ரக விமானத்தை பாகிஸ்தான் சுட்டது. அதில் அந்நாட்டு எல்லையில் விழுந்த விமானத்தின் விமானி தமிழக விமானி அபிநந்தனை அந்நாடு பிடித்து வைத்துள்ளது. அவர் தங்களிடம் உள்ளதாக ஒரு காணொளியை பாகிஸ்தான் வெளியிட்டிருந்தது. 

இந்த நிலையில் பாகிஸ்தானின் இந்த செயல் குறித்து பாகிஸ்தான் முன்னாள் தலைமை அமைச்சர் பெனசீர் பூட்டோவின் உறவினர் பாத்திமா பூட்டோ தனது கீச்சுப் பக்கத்தில் கூறுகையில் இந்திய விமானி பிடிப்பட்டதை தைரியமாகவும் ஒளிவு மறைவின்றி பாகிஸ்தான் காணெளி வெளியிட்டதை நான் பெருமையாக கருதுகிறேன்.

அதே வேளை அவர் மரியாதையுடன் நடத்தப்பட வேண்டும். பாகிஸ்தான் பிடியில் உள்ள இந்திய விமானியை மரியாதையாக நடத்த வேண்டும் என பாகிஸ்தானியர்கள் குரல் கொடுத்து வருவதை கவனத்தில் கொள்ளுங்கள். போரே வேண்டாம் என கருதும் நாம்: அனைவரையும் மரியாதையாகவும் கண்ணியமாகவும் நடத்த வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.

அதுபோல் பத்திரிகையாளர் மன்சூர் அலிகான் தனது கீச்சுப் பக்கத்தில் கூறுகையில் பணியில் இருக்கும் விமானிக்கு உரிய மரியாதையை நாம் வழங்க வேண்டும். பிடிப்பட்ட இந்திய விமானியை மரியாதையாக நடத்த வேண்டும். வீரத்துக்கு மதிப்பு கொடுக்கும் நாடு நமது பாகிஸ்தான் ஆகும் என கூறியுள்ளார்.

இதுகுறித்து ஹாசன் குசைன் குரேசி தனது கீச்சுப் பக்கத்தில் பிடிப்பட்ட இந்திய விமானிக்கு சிறந்த மருத்துவ உதவி, உணவு வழங்கப்பட வேண்டும். அவரை மரியாதையாகவும் கவுரவமாகவும் நடத்தி இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும். அவர் அவருக்கு கொடுத்த பணியை செய்தார் அவ்வளவே என குரேசி தெரிவித்துள்ளார்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்: 18,70,076.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.