Show all

நடிகர் ஜெயம் ரவி சுமார் 20 கோடி மதிப்பிலான தனி வீடு ஒன்றை வாங்கியுள்ளாரா! அதுவும் போயஸ் தோட்டத்தில்

16,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: சென்னையின் மையப்பகுதியில் இருக்கும் போயஸ் தோட்டம் பகுதி மிகப் பிரபலமானவர்கள் வசிக்கும் பகுதி. நடிகர் ஜெயம் ரவி இங்கு சுமார் 20 கோடி மதிப்பிலான தனி வீடு ஒன்றை வாங்கியுள்ளதாகத் தகவல் வெளியாகியது. 

அதாவது ஸ்கிரீன் சீன் என்னும் தயாரிப்பு நிறுவனத்திற்கு  வரிசையாக 3 படங்களில் நடித்துக்கொடுக்க ஜெயம் ரவி ஒப்பந்தமாகியுள்ள நிலையில் இந்த மூன்று படங்களில் சம்பளத்திற்கு பதில் அந்த நிறுவனத்திற்கு சொந்தமான போயஸ் கார்டனில் இருக்கும் வீடு ஜெயம் ரவிக்கு அளிக்கப்படுவதாக செய்திகள் தெரிவித்தன. 

ஆனால், ஜெயம் ரவியின் ரசிகர்கள் இது முற்றிலும் தவறான செய்தி என மறுப்பு தெரிவித்து வந்தனர். இதனை குறிப்பிட்டு ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து விட்டு இந்த செய்தி உண்மையில்லை என கீச்சுவில் பதிவிட்டுள்ளார் ஜெயம்ரவி.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்: 18,70,077.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.