Show all

தமிழக வீரர் அபினந்தனைக் கைப்பற்றியுள்ளதாக பாகிஸ்தான் கொக்கரிப்பு! பாஜக அரசின் சிறுபிள்ளைத்தனமான காய் நகர்த்தல்

15,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: 1.புல்வாமாவில் தீவிரவாதிகள் தாக்குதல். 2.அதிகாலையில் பாக்கிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதியில் குண்டு வீசல். 3.பாகிஸ்தான் பனிரெண்டு இடங்களில் தாக்குதல் 4.பதில் தாக்குதலாக இந்திய விமானப்படை பதிலடியின் போது, 5.இந்தியா மிக் 21 ரக விமானம் ஒன்றை பாகிஸ்தான் கைப்பற்றியது. இதிலிருந்த விமானியை கைது செய்துள்ளோம் என பாகிஸ்தான் கொக்கரித்துள்ளது. 

இந்நிலையில் இந்திய விமானி விரைவில் நலமுடன் வீடு திரும்புவார் என நம்புகிறேன் என காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி கூறியுள்ளார். 

ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லா, விமானப்படை விமானி இந்தியா திரும்பும் வரையில் மோடி இராணுவ நடவடிக்கையில் ஈடுபடக்கூடாது என வலியுறுத்தியுள்ளார். பாகிஸ்தான் தமிழக விமானியை திரும்ப ஒப்படைக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார். 

திமுக தலைவர் ஸ்டாலின், இந்திய விமானப்படை தமிழக விமானியை விரைவில் இந்தியாவிற்கு அழைத்துவர தேவையான நடவடிக்கையை இந்திய அரசு எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். பாகிஸ்தானிடம் கைதியாக பிடிபட்டுள்ள சென்னையை சேர்ந்த விமானப்படை அதிகாரியான அபினந்தனை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். 

பாகிஸ்தான் எல்லைக்குள் இன்று நுழைந்த இரு போர் விமானங்களை சுட்டு வீழ்த்தியதாக பாகிஸ்தான் ராணுவம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. வீழ்த்தப்பட்ட இரு விமானங்களில் ஒன்று பாகிஸ்தான் ஆக்கிரமிப்பில் உள்ள காஷ்மீரின் கோஹி ரட்டா பகுதியில் விழுந்து தீப்பற்றி எரியும் காட்சிகளை அந்நாட்டு ஊடகங்கள் வெளியிட்டுள்ளன.

இந்திய விமானப்படையின் வீரர் அபினந்தனை கைது செய்துள்ளோம். அவருடைய பணியாளர் எண் 27981. அவர் இப்போது எங்கள் ராணுவத்திடம் உள்ளார் என பாகிஸ்தான் தெரிவித்தது.

இதற்கிடையே, பாகிஸ்தானில் சிக்கிய விமானி அபினந்தன் வர்த்தமான் என்பதும், சென்னை தாம்பரம் அருகே மாடம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் என்ற தகவல் வெளியாகியுள்ளது. 

உயிரைப் பணயம் வைக்கும் ராணுவத்தில் அணிஅணியாய் தமிழர்கள். நடுவண் அரசு ஆளுமைகளிலும், அறங்கூற்றுமன்றம், ரா உளவு அமைப்பு, நடுவண் குற்றப் புலனாய்வுத் துறை, தேர்தல் ஆணையம் இப்படி உயர் மட்ட அதிகாரப் பதவிகளில் எல்லாம் பார்ப்பனியர்கள், மார்வாரிகள், பணியாக்கள். தொடரும் சிறுபிள்ளைத்தனங்களில் தமிழர்களே தொடர் பலிகடா

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்: 18,70,076.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.