14,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பால்கோட், சகோதி, முஸாபராபாத் ஆகிய இடங்களில் நேற்று காலை 3.30 மணிக்கு நுழைந்த இந்திய விமானப்படை விமானம் அதிரடி தாக்குதலை நடத்தியது. பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் இந்திய விமானப் படையினர் தாக்குதல் நடத்தியதற்கு கண்டனம் தெரிவிக்கும் விதமாக, இந்தியத் திரைப்படங்கள் பாகிஸ்தானில் திரையிடப்படாது என்று அந்நாடு அறிவித்துள்ளது. வட இந்தியாவில் பேசும் ஹிந்தியும், பாகிஸ்தானில் பேசும் உருதும் வேறு வேறு மொழிகள் அல்ல. பேசும் போது இரண்டும் ஒரே மொழிகள் தாம். எழுதும் போதுதான் உருது அராபி மொழிச் சாயலில் ஆன எழுத்துகளில் எழுதப் படுகிறது. ஹிந்தி சம்ஸ்கிருதத்தில் எழுதப் படுகிறது. அதனால் ஹிந்திப் படங்களுக்கு நல்ல சந்தைதான் பாகிஸ்தான். அதனால் இந்தியாவிற்கு பாகிஸ்தான் தனது எதிர்ப்பை பதிவு செய்ய இந்தியத் திரைப்படங்கள் பாகிஸ்தானில் திரையிடப்படாது என்று அந்நாடு அறிவித்துள்ளது. காஷ்மீர் மாநிலம் புல்வாமா பகுதியில் இந்திய பாதுகாப்புப் படைகள் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்திய விவகாரம் இந்தியாவில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்தநிலையில், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பால்கோட், சகோதி, முஸாபராபாத் ஆகிய இடங்களில் நேற்று காலை 3.30 மணிக்கு நுழைந்த இந்திய விமானப்படை விமானங்கள் அதிரடி தாக்குதலை நடத்தின. தீவிரவாதிகள் முகாம் மீது, 12 மிராஜ் ரக விமானங்கள் மூலம் 1,000 கிலோ வெடிகுண்டு வீசப்பட்டு அவை முற்றிலும் அழிக்கப்பட்டதாக இந்தியா தரப்பில் கூறப்படுகிறது. இந்நிலையில், இந்தியத் திரைப்படங்களுக்கு பாகிஸ்தான் திரைப்பட விநியோகஸ்தர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனால், இந்தியப் படங்கள் பாகிஸ்தானில் வெளியாகாது என்று பாகிஸ்தானின் தகவல் தொடர்புத்துறை அமைச்சர் சவுத்ரி பவாத் குசைன் கூறியுள்ளார். இந்திய விளம்பரங்களைப் புறக்கணிக்கவும் பாகிஸ்தான் தொலைதொடர்புத்துறை அறிவுறுத்தியுள்ளது. பாகிஸ்தானுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில், அனைத்து இந்திய திரை தொழிலாளர் சங்கம், இந்திய திரையுலகில் பாகிஸ்தானைச் சேர்ந்த எந்த திரைப்பட கலைஞர்களும் பணியாற்ற தடை விதித்துள்ளனராம். -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்: 18,70,075.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.