Show all

சீனாவில் படப்பிடிப்பு! பிரபுதேவாவின் யங் மங் சங்; நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு நடப்பது போன்ற கதையாக உருவாகி வருகிறது

14,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: அர்ஜுன்.எம்.எஸ். இயக்கத்தில், பிரபுதேவா-லட்சுமிமேனன் நடிப்பில் உருவாகி வரும் ஹயங் மங் சங் படத்தின் முதன்மை சண்டைக்காட்சிகள் சீனாவில் படமாகி இருக்கிறது. 

பிரபுதேவா தற்போது யங் மங் சங், பொன் மாணிக்கவேல், தேவி2 உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். இதில் யங் மங் சங், படத்தை அர்ஜுன்.எம்.எஸ். இயக்கி வருகிறார். இதில் பிரபுதேவாவுக்கு கதைத்தலைவியாக லட்சுமி மேனனும், பகைவனாக பாகுபலி பகைவன் பிரபாகரும் நடிக்கின்றனர். முதன்மைக் கதாபாத்திரங்களில் தங்கர்பச்சான், ஆர்.ஜே.பாலாஜி, சித்ரா லட்சுமனன், கும்கி அஸ்வின், காளி வெங்கட், முனீஸ்காந்த், மாரிமுத்து, வித்யா உள்ளிட்ட பலரும் நடிக்கிறார்கள்.

தமிழகம், ஆந்திரா, கர்நாடகாவை தொடர்ந்து சீனாவில் டெங் லெங் என்ற இடத்தில் அதிக பொருட்செலவில் அரங்குகள் அமைத்து படப்பிடிப்பை நடத்தினார்கள். இதில் பிரபுதேவா பகைவன்லளுடன் மோதும் சண்டைக் காட்சிகள் படமாக்கப்பட்டது. குங்பூ மற்றும் சீனச் சண்டை பற்றிய காட்சிகள் கொண்டு நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு நடப்பது போன்ற கதையாக யங் மங் சங் உருவாகி வருகிறது.

வாசன் விசுவல் வென்சர்ஸ் சார்பாக கே.எஸ்.சீனிவாசன், கே.எஸ்.சிவராமன் தயாரிக்கும் இந்த படத்திற்கு அம்ரீஷ் இசையமைக்கிறார். குருதேவ் ஒளிப்பதிவு செய்ய, பாசில், நிரஞ்சன் படத்தொகுப்பை கவனிக்கின்றனர்

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்: 18,70,075.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.