Show all

எல்லையில் 12 இடங்களில் பாக்கிஸ்தான் தாக்குதல்! இந்திய வீரர்கள் 5 பேர் காயமடைந்தனர்

15,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: ஜம்மு-காஷ்மீர் எல்லையில், 12க்கும் மேற்பட்ட இடங்களில் பாக்கிஸ்தான் தாக்குதல் நடத்தியதில் இந்திய வீரர்கள் 5 பேர் காயமடைந்தனர்.

ஜம்மு-காஷ்மீரில், பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பழி வாங்குவதாக நேற்று அதிகாலை, பாக்கின் பாலகோட் பகுதியில், இந்திய விமானப்படை விமானங்கள், குண்டுமழை பொழிந்து அதிரடி தாக்குதல் நடத்தின. இதில், 350 பயங்கரவாதிகள் உடல் சிதறி பலியாகியதாக இந்தியா தரப்பில் சொல்லப் படுகிறது.

இந்தியாவின் தாக்குதலையடுத்து ஜம்மு-காஷ்மீர் மாநிலம் ரஜோரி பகுதியில் 12க்கும் மேற்பட்ட இடங்களில் பாக்கிஸ்தான் தாக்குதல் நடத்தி வருகிறது. 

இதில் இந்திய வீரர்கள் 5 பேர் காயமடைந்தனர். பாக்கிஸ்தான் ராணுவத்துக்கு இந்திய வீரர்கள் பதிலடி தந்து வருகின்றனர்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்: 18,70,076.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.