11,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5120: உலகத்தில் தலைமை அமைச்சராகும் முதல் கிரிக்கெட் வீரர் என்று இம்ரான்கான் அறியப் பட இருக்கிறார். பாகிஸ்தானில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் அதிக தொகுதிகளில் இம்ரான் கானின் கட்சி வெற்றி பெற்று முன்னிலையில் உள்ளது. முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரிப்பின் கட்சி இரண்டாவது இடத்தில் உள்ளது. இதனால் இம்ராம்கான் பாகிஸ்தானின் புதிய தலைமை அமைச்சராகும் வாய்ப்பு உள்ளது. தேர்தல் முடிவுகள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டபின் ஆட்சி அமைப்பதற்கான நடவடிக்கைகள் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்தி காஷ்மீர் பிரச்சனையை தீர்க்க விரும்புவதாக இம்ரான்கான் தெரிவித்துள்ளார். காஷ்மீர் மக்கள் நீண்ட நாட்களாக பல்வேறு இன்னல்களை அனுபவித்து வருவதாக குறிப்பிட்டுள்ள இம்ரான் கான் இந்தியாவுடன் நட்புறவை எப்போதும் பாகிஸ்தான் விரும்புவதாகவும் தெரிவித்துள்ளார். பாகிஸ்தானில் வரிசீர்திருத்தம் மற்றும் அரசு செலவீனங்களை குறைக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ள தாம் விரும்புவதாகவும் இம்ரான்கான் தெரிவித்துள்ளார். காஷ்மீரில் மோடி, மக்களால் அமைக்கப் பட்ட அரசை காலை வாரிவிட்டு கலைத்தது இம்ரான்கானை நேரடியாக எதிர்கொள்ளத்தானா? இதெல்லாம் முன்பே தெரியுமா மோடிக்கு. -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,861.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



