11,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5120: சூரியன், புவி, நிலா மூன்றும் நேர்க்கோட்டில் வரும் போது, சூரிய ஒளி சந்திரனுக்கு செல்லாமல் புவி மறைத்துக் கொள்கிறது. அப்போது ஏற்படுவது தான் சந்திர கிரகணம் ஆகும். இந்நிலையில் இன்று இரவு 11.54 மணிக்கு பகுதி சந்திர கிரகணம் தொடங்குகிறது. இரவு 1 மணியளவில் முழு சந்திர கிரகணம் ஏற்படுகிறது. பின்னர் 103 நிமிடங்கள் நீடித்து, அதிகாலை 2.43 மணிக்கு சந்திர கிரகணம் முடிகிறது. கிரகணத்தின் போது ரத்த சிவப்பு நிறத்தில் நிலா காட்சியளிக்கும். இது 21ஆம் நூற்றாண்டின் மிக நீண்ட முழு சந்திர கிரகணம் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் புதன், வெள்ளி, வியாழன், சனி, செவ்வாய் ஆகிய 5 கோளகளும் ஒன்றாக அணி வகுத்து வருவதால், இது மிகவும் சிறப்பு வாய்ந்தது. இந்த கிரகணத்தை பொதுமக்கள் வெறும் கண்களால் பார்க்கலாம் என்றும், தீங்கு ஏதுமில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக சென்னை பிர்லா கோளரங்கம், பெரியார் அறிவியல் தொழில்நுட்ப மையத்தில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கோள்களின் இருப்பு நிலை, சூரியனை புவி சுற்றி வருவதற்கான கால அளவு என்பனவற்றை, இன்றைக்கு இருக்கிற இத்தனை கருவிகளும் இல்லாத 5120 ஆண்டுகளுக்கு முன்பே கணித்து தொடர் ஆண்டு கணக்கை உருவாக்கியவர்கள் நம் பழந்தமிழர்கள். அது மட்டுமில்லாமல் சந்திர, சூரிய கிரணங்களை கணிப்பதற்கான இராகு கேது என்கிற கோள் மறைப்புகளையும் கண்டறிந்தபடி அதனைத் தொடர்ந்து வருகிற பஞ்சாங்கமும் இன்று சந்திர கிரகணம் என்று தெரிவிக்கிறது. அது எப்படி தமிழர்களுக்கு சாத்தியமானது என்பது குறித்த தொடர் ஆய்வை மேற்கொள்ளும் முகமாக இன்றைய தமிழர்கள் பத்துப் பாட்டு, எட்டுத்தொகை, வானியல் செய்திகளை ஆய்வு செய்திட முன்; வரவேண்டும். -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,861.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



