Show all

அபிநந்தனை விமானத்தில் அழைத்து வரும் இந்தியாவின் கோரிக்கையை நிராகரித்தது பாகிஸ்தான்! பாதுகாப்பு காரணம்

17,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: இந்திய விமானப்படை வீரர் அபிநந்தனை விமானம் மூலம் அழைத்துக் கொள்ள வேண்டும் என்கிற இந்தியாவின் கோரிக்கைக்கு கடைசிவரை அனுமதி அளிக்க பாகிஸ்தான் அரசு மறுத்து விட்டது என்று செய்திகள் தெரிவிக்கின்றன. அபிநந்தனை அடாரி-வாகா எல்லையில் தரைவழியாக மட்டுமே அனுப்ப முடியும் என்று திட்டவட்டமாகத் தெரிவித்துவிட்டனர்

பாகிஸ்தான் ராணுவத்தால் கைது செய்யப்பட்ட அபிநந்தன் அந்தநாட்டு அரசின் கட்டுப்பாட்டுக்குச் சென்றார். பாகிஸ்தான் ராணுவம் அபிநந்தனை கைது செய்த தகவல் அறிந்ததும், 

தேசத்தின் ஒட்டுமொத்த மக்களும், அபிநந்தன் பத்திரமாக மீட்கப்பட வேண்டும் என்று ஒருமித்த குரல் எழுப்பினார்கள். 

பாகிஸ்தான் தலைமை அமைச்சர் இம்ரான்கான் எந்த வித நிபந்தனையும் இந்தியாவிற்கு விதிக்காமல், நல்லெண்ண அடிப்படையில் அபினந்தனை விடுவிப்பதாக நேற்றே பாராளுமன்றத்தில் தெரிவித்தார். 

இந்நிலையில், அபிந்தனை வான்வழியாக, அதாவது விமானம் மூலம் அழைத்துக் கொள்ள இந்திய பாதுகாப்புத்துறை முடிவு செய்தது. இதுதொடர்பாக பாகிஸ்தானுக்கு சிறப்பு விமானத்தை அனுப்பி அபிநந்தனை அழைத்துக் கொள்ள முடிவு செய்தது.

இந்தக் கோரிக்கையை பாகிஸ்தான் அரசிடமும், பாதுகாப்புத் துறையிடமும் இந்தியாவின் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால், பாதுகாப்பு காரணம் கருதி பாகிஸ்தான் அரசு, அபிநந்தனை அடாரி-வாகா எல்லைவழியாக மட்டுமே அனுப்ப முடியும் என்று திட்டவட்டமாக அறிவித்து இந்தியாவின் கோரிக்கையை நிராகரித்தது.

பாகிஸ்தான் விரும்பியவாறே கார் மூலம் இராணுவ வீரர் அபினந்தன் அவர்களை அழைத்து வந்து இந்தியாவிடம் ஒப்படைத்தது.

இந்த நடிவடிக்கைகளை யெல்லாம் பாஜக தங்கள் அரசியல் வெற்றிக்கு பயன் படுத்திக் கொள்ள இரண்டு நாட்கள் முன்பு வரை காய் நகர்த்தி, சதம் அடித்துக் கொண்டிருந்த நிலையில், 

உலகம் வியக்க அமைதி புறா இம்ரான்கான் நெஞ்சில் இறக்கை கட்டிப் பறக்க, சாதனையை ஒரே தட்டில் தட்டிச் சென்று விட்டார் இம்ரான்கான். 

பாமர மக்கள் என்னனென்னவோ கேள்விப் பட்டோமே பாகிஸ்தான் குறித்து! ஓ இதுவோ பாகிஸ்தான் என்று வியந்து பாராட்டுகின்றனர்.

  -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்: 18,70,078.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.