Show all

சல்லி கற்கள் பொறுக்கும் போராட்டத்திற்கு வித்திட்ட அரசு! சல்லிக்கட்டு போராட்டம் நடத்தி உலகம் வியக்க சாதனை புரிந்த தமிழனை

17,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: தஞ்சாவூர் மாவட்டம் பூதலூர் ஒன்றியம் வெண்டயம்பட்டி ஊராட்சி வடுகன்புதுப்பட்டியில் சரியாக சாலை போடாததால் சல்லி கற்கள் பெயர்ந்து சேதமடைந்துவிட்டது. கடந்த கிழமை அச்சாலை அமைக்கப்படும் போதே  சரியான முறையில் கலவை போடப்படவில்லை என்று அப்பகுதிமக்கள் தடுத்து நிறுத்தினர். அப்போது ஒன்றிய ஆணையர் மற்றும் அதிகாரிகள் சரியாக செய்து தருவதாக உறுதி அளித்தனர். 

ஆனால் அதே நிலையில் தரமற்று சாலை பணியை முடித்துவிட்டனர். போதுமான தார்  சேர்க்கப்படாததால் சல்லிகற்கள் பெயர்ந்து விட்டன.

இதனைக் கண்டித்து நாளை சாலையில் பெயர்ந்து குவியல் குவியலாக கிடக்கும்  சல்லிகற்களை துடைப்பத்தால்  கூட்டி அள்ளி அதிகாரிகளிடம் சேர்க்கும் நூதன  போராட்டம்  நடத்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி  முடிவு செய்துள்ளது. மாவட்ட செயற்குழு உறுப்பினர் கண்ணன் தலைமையில்  நடைபெறும் இந்த போராட்டத்தில் பொதுமக்களும் திரளாக கலந்து கொள்வார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

  -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்: 18,70,078.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.