ஐ.நா. பருவநிலை மாற்றம் குறித்த மாநாட்டில் உலக நாடுகளின் தலைவர்களைப் பார்த்து உங்களுக்கு எவ்வளவு துணிச்சல் இருக்கும்? என 16 அகவை நிரம்பிய சிறுமி கேட்ட கேள்வியால், சிறுமியின் கோபம் செய்திகளில் தலைப்பாகி வருகிறது. 07,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5121: அமெரிக்காவின் ஜெனிவாவில் உள்ள ஐக்கிய நாடுகள் அவையில் பருவநிலை மாற்றம் குறித்த மாநாடு நடைபெற்று வருகிறது. அதில் இந்தியத் தலைமைஅமைச்சர் மோடி, அமெரிக்க அதிபர் டிரம்ப் உள்பட உலகின் பல நாடுகளை சேர்ந்த தலைவர்கள் பங்கு பெற்றுள்ளனர். இந்நிலையில், அந்த மாநாட்டில் பங்கேற்ற, பருவநிலை மாற்ற ஆர்வலரான, கிரேட்டா தன்பெர்க் என்ற ஸ்விடன் நாட்டை சேர்ந்த 16 அகவை சிறுமி பேசியதாவது: என்னுடைய செய்தி என்பது நாங்கள் அனைவரும் உங்களை கவனித்துக்கொண்டுதான் இருக்கிறோம். அனைத்துமே தவறாக நடந்து கொண்டு இருக்கிறது. நான் இங்கே இருக்க கூடாது மாறாக கடலுக்கு மறுபக்கம் உள்ள எனது பள்ளியில் படித்துக்கொண்டு இருக்க வேண்டும். நீங்கள் எங்களிடம் (இளைய தலைமுறையினர்) நம்பிக்கையை எதிர்பார்க்கிறீர்கள். உங்களுக்கு எவ்வளவு தைரியம் இருக்கும்? நீங்கள் என்னுடைய கனவு மற்றும் குழந்தை பருவத்தினை வெற்றுவார்த்தைகளால் திருடி விட்டீர்கள். பருவநிலை மாற்றத்தால் மக்கள் பாதிக்கப்பட்டு உயிரிழந்து வருகின்றனர். நாம் அனைவரும் பேரழிவின் தொடக்கத்தில் இருக்கிறோம். ஆனால் நீங்கள் பணம், பொருளாதார வளர்ச்சி போன்ற கற்பனை உலகத்தை பற்றி பேசிக்கொண்டு இருக்கிறீர்கள். உங்களுக்கு எவ்வளவு தைரியம் இருக்கும்? உலக தலைவர்களிடம் பேசும் போது இளைஞர்கள் கேட்டுக்கொண்டுதான் இருக்கிறார்கள் பருவநிலை மாற்றம் குறித்த அவசர நிலையை புரிந்து கொள்ளமுடிகிறது என தலைவர்கள் கூறுகின்றனர். ஆனால், நான் எவ்வளவு கோபமாகவும், கவலையாகவும் இருந்தாலும் நான் அதை நம்ப தயாராக இல்லை. எனென்றால் நீங்கள் உண்மையிலேயே பருவநிலை மாற்றத்தை உணர்ந்து அதை தடுக்க முயற்சி மேற்கொள்ளாவிட்டால் நீங்கள் அனைவரும் மிகவும் அரக்கர்கள். ஆனால் நீங்கள் அவ்வாறு இருப்பீர்கள் என நான் நம்பவில்லை. நீங்கள் எங்களைத் தவறவிடுகிறீர்கள். ஆனால் இளைய தலைமுறையினர் உங்கள் துரோகத்தை புரிந்து கொள்ள தொடங்கியுள்ளோம். அடுத்த தலைமுறையின் பார்வை உங்கள் முன்தான் உள்ளது. நீங்கள் எங்களை தோல்வியடைய செய்ய நினைத்தால் நான் சொல்வேன் உங்களை நாங்கள் ஒரு போதும் மன்னிக்கமாட்டோம். இவ்வாறு கிரேட்டா தன்பெர்க் கோபமாகக் கூறினார். பருவநிலை மாற்றத்திற்கு காரணமாக, நாம் செய்கிற தவறு புவியைச் சூடடையச் செய்வதுதான். இந்த புவிசூடேற்ற நடவடிக்கைகளால், புவியின் வடதென் துருவப் பகுதிகளில் உள்ள பனிக்கட்டிகள் கரைந்து கடல் மட்டம் உயர்ந்து நிலப்பகுதிகள் குறைந்து வருகின்றன. புவியின் சூடேற்றத்திற்கு காரணமாக, நாம் செய்யும் தவறுகள் மரங்களை எல்லையில்லாமல் அழிக்கிறோம். மலைகளை அழிக்கிறோம். புவியை பாதுகாத்து வரும் காற்று மண்டலத்தை மாசுபடுத்துகிறோம் மற்றும் ஏவுகணை, ஏவுஊர்திகளால் காற்று மண்டலத்தில் ஏராளமான துளைகளை இட்டு வருகிறோம். அதிகமான வெப்பத்தை உள்வாங்கும் கான்கிரிட் கட்டடங்கள், சாலைகளை எல்லையில்லாமல் அமைக்கிறோம். இவைகளுக்கான நிறைவான மாற்று ஏற்பாடுகள் என்ன இருக்க முடியும்? இன்னும் சிந்திக்க வில்லை. இப்போதைக்கு இந்தச் சிறுமியைப் போல கோபத்தை மட்டும் ஆங்காங்கே பதிவு செய்து வருகிறோம். -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல, தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,285.
பருவநிலை மாற்றத்தை கட்டுப்படுத்த எந்த திட்டமும், தீர்வும் இந்தக் கூட்டத்தில் ஐநா அவையால் சமர்ப்பிக்கப்படவில்லை. ஏனென்றால் இன்றய நிலையில் பருவநிலை மாற்றத்தின் அளவு மிகவும் பெரியது. அதை கட்டுப்படுத்த ஐநா அவையோ அல்லது அதன் பொதுச்செயலாளர் அன்ட்டோனியோ குட்டரஸோ இன்னும் முதிர்ச்சி அடையவில்லை.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.