சங்க காலத் தமிழ் இலக்கியங்கள் எதுவும் புனைவு இல்லை. இந்த மண்ணில் வாழ்ந்த பழந்தமிழர்களின் வாழ்வியல்தான் சங்க இலக்கியங்கள் என்பதை வரலாற்றுச் சான்றுகளோடு கம்பீரமாக வெளிப்படுத்தி நிற்கிறது கீழடி. இதற்கான ஆவணத்தை ஒவ்வொரு தமிழரும் படிக்கவும், பகிரவும் தமிழகஅரசு இணையத்தில் படக்கோப்பாக பதிவேற்றியிருக்கிறது. நீங்களும் படியுங்கள். 07,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5121: சங்க காலத் தமிழ் இலக்கியங்கள் எதுவும் புனைவு இல்லை. இந்த மண்ணில் வாழ்ந்த பழந்தமிழர்களின் வாழ்வியல்தான் சங்க இலக்கியங்கள் என்பதை வரலாற்றுச் சான்றுகளோடு கம்பீரமாக வெளிப்படுத்தி நிற்கிறது கீழடி. சங்க இலக்கியம் என்பது கிமு 3-ம் நூற்றாண்டு தொடங்கி கிபி 3-ம் நூற்றாண்டு வரை என்கிற வரையறை உண்டு. அதையெல்லாம் தகர்த்து கிமு 6-ம் ஆண்டு வரை நகரத்;திச் சென்றிருக்கிறது கீழடி ஆய்வு முடிவுகள். கங்கை நதிக்கரையில் நகர நாகரிகம் என்பது தோற்றம் பெற்ற காலம் கிமு 3-ம் நூற்றாண்டு. ஆனால் தமிழர்கள் அந்த கிமு 3-ம் நூற்றாண்டில் நகர நாகரிகத்தின் உச்சகட்ட வாழ்வியலை வாழ்ந்தவர்கள் என்பதை கீழடியின் ஒவ்வொரு தடமும் திசையெங்கும் குவிந்து கிடக்கும் ஓராயிரம் சான்றுகள் பெருமிதத்துடன் பதிவு செய்திருக்கின்றன. கீழடியின் அகழாய்வு முடிவுகளை “கீழடி. வைகை நதிக்கரையில் சங்க கால நகர நாகரிகம்” என்ற தலைப்பில் தமிழக அரசின் தொல்லியல் துறை ஆய்வு அறிக்கையாக வெளியிட்டிருக்கிறது. கீழடி ஆய்வு முடிவுகள் எப்படியெல்லாம் தொழில்நுட்ப ரீதியாக விஞ்ஞானப் பூர்வமாக நிரூபிக்கப்பட்டன என்பதை உலகுக்கு பிரகடனம் செய்யும் பேராவணம் அது! தமிழர்கள் தங்களது வாழ்வில் போற்றிப் பாதுகாக்க வேண்டிய அந்த பெரும் ஆவணத்தை நீங்களும் முழுமையாக படியுங்கள்: தமிழில் படிக்க கீழடி pdf என்றும், ஆங்கிலத்தில் படிக்க Keeladi pdf என்றும் இணையத்தில் தேடிப் படிக்கலாம். -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல, தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,285.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.