Show all

அடடே இது ஒரு நல்ல தகவலாக இருக்கிறதே! இந்தியாவில் கொரோனா பலி குறைவாக இருக்க இதுதான் காரணமா

இத்தாலி போன்ற நாடுகளில் கொரோனா பலி எண்ணிக்கை மிகுதியாக இருக்கும் போது, இந்தியாவில் கொரோனா பலி குறைவாக இருக்க இதுதான் காரணம் என்று ஆய்வில் ஓர் அசத்தல் தகவல் வெளியாகி அடடே அடடே இது ஒரு நல்ல தகவலாக இருக்கிறதே என்று நமக்கு வியப்பை ஏற்படுத்துகிறது. அது என்னவென்று பார்ப்போம்.

26,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5121: இத்தாலி போன்ற நாடுகளில் கொரோனா பலி எண்ணிக்கை மிகுதியாக இருக்கும் போது, இந்தியாவில் கொரோனா பலி குறைவாக இருக்க இதுதான் காரணம் என்று ஆய்வில் ஓர் அசத்தல் தகவல் வெளியாகி அடடே அடடே இது ஒரு நல்ல தகவலாக இருக்கிறதே என்று நமக்கு வியப்பை ஏற்படுத்துகிறது. 
 
காசநோய் தடுப்பூசி (பி.சி.ஜி) கொள்கை இல்லாத நாடுகள் கொரோனா பாதிப்பால், பத்து மடங்கு அதிக எண்ணிக்கையில் இறப்பை சந்தித்துள்ளன என்று ஒரு ஆய்வு முடிவு தெரிவிக்கிறது. 

கொரோனா நுண்ணுயிரியின் வலுகுன்றிய புள்ளி கண்டுபிடிப்பு ஒன்று கொரோனா ஆய்வில் கிட்டியிருக்கிறது. அதன் முயற்சியின் போது 178 நாடுகளின் தரவுகளை பகுப்பாய்வு செய்த அமெரிக்கா மற்றும் இங்கிலாந்தில் உள்ள மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் இந்த உண்மையையும் கண்டுபிடித்துள்ளனர். 

பி.சி.ஜி. என்பது பேசிலஸ் கால்மெட்-குய்ரின் என்ற பெயரின் சுருக்கமாகும். காசநோயுக்கான தடுப்பூசி இது ஆகும். இந்தியா போன்ற நாடுகளில் குழந்தைகளுக்கு, பிறந்த உடனேயே இந்த தடுப்பூசி போடப்படுகிறது. 

அமெரிக்கா, இத்தாலி மற்றும் ஹாலந்து போன்றவை பணக்கார நாடுகளாக இருப்பதனாலோ என்னவோ அவைகள் காசநோய் தடுப்பூசி கொள்கையை அவர்கள் வைத்திருக்கவில்லை. 

178 நாடுகளில் மார்ச் 9 முதல் 24 வரை 15 நாட்களுக்கு கோவிட் -19 நிகழ்வுகளையும் இறப்பையும் இந்த ஆய்வு கணக்கிட்டுள்ளது. அந்த அடிப்படையில் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளது. 

காசநோய் தடுப்பூசியின் பாதுகாப்பு விளைவை நாங்கள் எதிர்பார்த்தோம் என்றாலும், காசநோய் தடுப்பூசி உள்ள மற்றும் அது இல்லாத நாடுகளுக்கு இடையேயான பலி எண்ணிக்கை கிட்டத்தட்ட 10 மடங்கு இருப்பது, மகிழ்ச்சியுடன் வியப்பாக இருந்தது, என்கிறார் டாக்டர் ஆசிஷ் காமத். 

ஆண்டர்சன் புற்றுநோய் மையத்தில் சிறுநீரக புற்றுநோயியல் (அறுவை சிகிச்சை) மற்றும் புற்றுநோய் ஆராய்ச்சி பேராசிரியராக இவர் பணியாற்றி வருகிறார். காச நோய் என்பது நுரையீரல் தொடர்பானது. கொரோனா நுண்ணுயிரியும்;, நுரையீரலை தாக்கக் கூடியது. எனவே, காச நோய் தடுப்பூசி, மக்களுக்கு வலிமை சேர்க்கிறது என்று மருத்துவர்கள் கணக்கிட்டுள்ளனர்.

காசநோய்த் தடுப்பூசி அடிப்படையில் கொரோனாவிற்கு தடுப்பூசி, அல்லது காசநோய் தடுப்பூசியையே கொரோனாவிற்கு முயலாலாமா என்கிற வகையாக மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் முனையலாமே. அது சாத்தியமானல் கொரோனாவை விரட்டுவது மிகுந்த எளிமையாக இருக்கக் கூடுமே. 

காசநோய்த் தடுப்பூசி கால்நடைக் காசநோய்க் கிருமியிலிருந்து உண்டாக்கப்பட்ட உயிருள்ள மற்றும் வலிமை குறைக்கப்பட்ட பாக்டீரியங்களைக் கொண்ட தடுப்பூசி ஆகும்.
 
வளர்ப்பூடகங்களில் தொடர்ச்சியாய்ப் பல்லாண்டுகள் வளர்த்ததன் மூலம் இக்கிருமி தனது நோய் உண்டாக்கும் தன்மையை இழந்தது. இத் தடுப்பூசி எந்த அளவு காசநோயிலிருந்து காப்பாற்றும் என்பது நாடுகளைப் பொறுத்து வேறுபடுகிறது. ஒட்டு மொத்தமாய்ப் பார்த்தால் இதன் தடுப்பு மதிப்பு 80 விழுக்காடு ஆகும். காச நோய் மற்றும் தொழு நோய் அதிகம் உள்ள நாடுகளில் இத் தடுப்பூசி முதன்மையாகப் பயன்படுகிறது.

பிறந்த ஆரோக்கியமான குழந்தைக்கு ஒரு முறை மட்டும் வழங்கப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. புரூலி புண் மற்றும் சிறு நீர்ப்பை புற்று நோய் ஆகியவற்றையும் கட்டுப்படுத்த இத் தடுப்பூசி பயன்படுகிறது.

இம் மருந்திற்கு கடுமையான பக்க விளைவுகள் ஏதுமில்லை. ஊசி குத்துமிடத்தில் சிவப்பு நிறத்தில் வீக்கமோ அல்லது வலியோ இருக்கும். ஊசி குத்திய இடத்தில் சிறிய புண் ஏற்பட்டு பின் தழும்பாக மாறும். கர்ப்ப காலத்தில் இந் மருந்தைப் பயன்படுத்துவது பாதுகாப்பானது அல்ல. மாட்டில் பொதுவாகக் காணப்படும் மைக்கோபாக்டீரியம் போவிசு  என்ற பாக்டீரியாவிலிருந்து இம் மருந்து தயாரிக்கப்படுகிறது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.