Show all

தமிழகத்தில் இன்று புதன்கிழமை கொரோனா நிலவரம்! நலம்பெற்றவர்கள் 21. பாதிப்பு 738. உயிரிழப்புப் சோகம் 8

கொரோனா நோய்த்தடுப்பு நடவடிக்கையில் தமிழக அரசு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. அன்றாடம் நோய்த்தொற்று உள்ளவர்களுக்கு எடுக்கப்படும் பரிசோதனை முடிவுகள், வீட்டுக்கண்காணிப்பு, வீடுகளில் ஆய்வு உள்ளிட்ட நலங்குத்துறையின் நடவடிக்கைகள் குறித்து அதன் செயலர் பீலா ராஜேஷ் செய்தியாளர்களுக்கு அறிவிக்கிறார்.

26,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5121: கொரோனா நோய்த்தடுப்பு நடவடிக்கையில் தமிழக அரசு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. அன்றாடம் நோய்த்தொற்று உள்ளவர்களுக்கு எடுக்கப்படும் பரிசோதனை முடிவுகள், வீட்டுக்கண்காணிப்பு, வீடுகளில் ஆய்வு உள்ளிட்ட நலங்குத்துறையின் நடவடிக்கைகள் குறித்து அதன் செயலர் பீலா ராஜேஷ் செய்தியாளர்களுக்கு அறிவிக்கிறார்.

சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் நலங்குத் துறைச் செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்த கொரோனா நிலவரம்:-
இன்று வரை கொரோன தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் 738பேர்கள். தமிழகத்தில் கரோனா நடவடிக்கையில் இதுவரை வீட்டுக்கண்காணிப்பில் உள்ளவர்கள் 60,739 பேர்கள். 28 நாள் கண்காணிப்பை முடித்தவர்கள் எண்ணிக்கை 32,075பேர்கள்.

கண்காணிப்பு நடவடிக்கைகள் 34 மாவட்டங்களில் எடுக்கப்பட்டுள்ளது. கண்காணிப்பு நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்ட வீடுகள் எண்ணிக்கை 15 லட்சத்து 66 ஆயிரத்து 448. கண்காணிப்பு நடவடிக்கையில் அணுகிய மக்கள் 53 லட்சத்து 67 ஆயிரத்து 238. ஆய்வில் ஈடுபட்ட களப்பணியாளர்கள் எண்ணிக்கை 30 ஆயிரத்து 668.

அதிக பாதிப்புள்ளவர்கள், நேரடியாகத் தொற்றுள்ளவர்களை உடனடியாக ஆய்வுக்கு உட்படுத்துவோம். மறைமுகத் தொடர்பில் இருந்தவர்களை வீட்டுக்கண்காணிப்பில் இருக்கச் சொல்வோம். தொற்று அறிகுறி வந்தால் உடனடியாக அழைத்து வந்து பரிசோதனை செய்வோம்.

சிகிச்சைக்காக தனியாக நிபுணர் குழு உள்ளது. இது தவிர நடுவண் அரசிலிருந்து அவர்கள் ஒரு நிபுணர் குழு வைத்து அவர்கள் தனியாக வழிகாட்டுதல் தருகிறார்கள். மரணம் குறித்து நிபுணர்குழு ஆய்வுக்கு உட்படுத்துகின்றனர்.

இரண்டாவது நிலையிலிருந்து மூன்றாவது கட்டத்துக்குச் செல்லும் நிலை வரக்கூடாது என்பதற்காகத்தான் பாடுபடுகிறோம். இதுவரை குணமடைந்து வீடு திரும்பியர்கள் 21பேர்கள். இவ்வாறு பீலா ராஜேஷ் தெரிவித்தார்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.