கொரோனா பாதித்த நபருக்கு அருகில் செல்ல நேர்ந்தால் எச்சரிக்கும் வகைக்கு, ஆரோக்கிய சேது என்ற ஒரு செயலியை நடுவண் அரசு வெளியிட்டுள்ளது. தொடக்கத்தில் ஆர்வம் காட்டியவர்கள் கூட பயனற்ற செயலி என்று பேசிக்கொள்கிறார்கள். 27,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5121: கொரோனா பாதித்த நபருக்கு அருகில் செல்ல நேர்ந்தால் எச்சரிக்கும் வகைக்கு, ஆரோக்கிய சேது என்ற ஒரு செயலியை நடுவண் அரசு வெளியிட்டுள்ளது. ஆரோக்கிய சேது எனப் பெயரிடப்பட்டுள்ள அந்தச் செயலியானது இந்தியாவின் நடுவண் உள்துறை அமைச்சகத்தின்கீழ் இயங்கும் National Disaster Management Authority யின் மூலம் வெளியிடப்பட்டுள்ளது. சீனாவில் கொரோனா பரவத் தொடங்கியபோது, நோய்ப் பரவலைக் குறைக்க பல்வேறுவிதமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வந்தன. மனிதத் தலையீடு இல்லாமல் தொழில்நுட்ப உதவியைக் கொண்டு நோய்ப் பரவலின் தாக்கத்தை குறைக்க புதிய செயலி ஒன்றைப் அறிமுகப்படுத்தி, அதை பயன்படுத்த அறிவுறுத்தியது சீனா. இதன்மூலம் கொரோனா பாதித்த நபருக்கு அருகில் செல்ல நேர்ந்தால் செல்பேசியில் உள்ள செயலியின் மூலம், ‘நீங்கள் நோய்த் தாக்குதலுக்கு உள்ளான நபரின் அருகில் உள்ளீர்கள்’ என நமக்கு எச்சரிக்கை செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டிருந்தது. தற்போது அதேபோன்ற ஒரு செயலியை இந்தியாவும் உருவாக்கி மக்கள் பயன்பாட்டிற்காக வெளியிட்டுள்ளது. ஆரோக்கிய சேது எனப் பெயரிடப்பட்டுள்ள அந்தச் செயலியானது இந்தியாவின் நடுவண் உள்துறை அமைச்சகத்தின்கீழ் இயங்கும் அமைப்பின் மூலம் வெளியிடப்பட்டுள்ளது. அந்தச் செயலி தமிழ், உட்பட 11 மொழிகளில் செயல்படும். அந்தச் செயலியில் நமக்கு கொரோனா தொற்று இருந்தால் நாமே அதில் பதிவு செய்து கொள்ள வேண்டும். இந்த வகையான கட்டமைப்புதாம் அந்தச் செயலியின் தோல்விக்குக் காரணம். சீனாவில் உருவாக்கப் பட்டிருந்த செயலியில் அரசே 1.கொரோனா இருப்பவர்கள், 2.கொரோனா பாதிக்கப் பட்டவரோடு தொடர்பில் இருந்தவர் 3. கொரோனா இல்லாதவர்கள் என்று மூன்று வண்ணங்களில் அடையாளம் காட்டும் வகையாக அமைத்திருந்ததாகத் தெரியவருகிறது. ஆனால் மக்களே பதிவு செய்து கொள்ளும் வகையான செயலியில்- கொரோனா இருக்கிறது என்று யார் பொறுப்பாக அதில் பதிவு செய்யப் போகின்றார்கள். அந்தச் செயலியை நமது செல்பேசியில் தரவிறக்கம் செய்து கொண்டு, மருத்துவ மனையின் பலநூறு கொரோனா நோயாளிகள் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ள பகுதிக்கு சென்றால் கூட நீங்கள் பாதுகாப்பாக இருக்கின்றீர்கள் என்றுதான் அந்தச் செயலிகாட்டும். கொரோனா உள்ளவர் கொரோனா இல்லாதவர் என்று அரசே பதிவிடும் வகையான செயலி மட்டுமே கொரோனா பரவலில் இருந்து நம்மைத் தற்காத்துக் கொள்ளப்பயன் படும். அதுவரை இந்தச் செயலியும் செயலிக்காக பணியமர்த்தப் பட்டவர்களுக்கான சம்பளம் எல்லாம்கூட வீண் விரயமே. நமது நடுவண் பாஜக அரசு மக்களுக்கு பாதிப்பு தரும் திட்டங்களில் சாம பேத தான தண்டம் அனைத்தையும் முன்னெடுப்பதை நாம் பலமுறைகள் சந்தித்திருக்கிறோம். உலகே அஞ்சி நடுங்கும் கொரோனா பரவலைத் தடுக்கும் வகையான ஒரு உருப்படியான செயலியை பாதிக்கப் பட்ட மக்களின் மூலம் தரவுப்படுத்தி செயலுக்கு கெண்டுவந்து விடலாம் என்று நினைக்கிறது. இந்தச் செயலி வெளியிடப்பட்டதிலிருந்து இதுவரை ஐந்து இலட்சம் பேர்கள் மட்டுமே தரவிறக்கம் செய்துள்ளார்கள். அவர்களில் ஒருவர்கூட கொரோனா தாக்கம் உள்ளவர் தரவிறக்கம் செய்து பதிவிட்டிருக்க வாய்ப்பேயில்;;;லை என்பதாகவே தெரிய வருகிறது. தொடக்கத்தில் இந்தச் செயலியை ஆர்வமாக தரவிறக்கம் செய்து கொண்டு அருமை அற்புதம் என்று கருத்து பதிவிட்டவர்கள் கூட வீணாய்ப் போன செயலி. செல்பேசி இடத்தை ஆக்கிரமிக்கும் இந்தச் செயலி தேவையா என்று அழிக்கத் தொடங்கியிருக்கிறார்கள். இந்தச் செயலி கொரோனா பரவலைத் தடுக்கும் வகைக்கான அற்புதமான முயற்சி. தயவுகூர்ந்து நடுவண் அரசு இந்தச் செயலியை தரப்டுத்திட வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கருதுகின்றனர்.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



