Show all

இந்தியாவைப் போலவே அவசரகதியில் நாள் குறிக்கிறதா இரஷ்யா! இந்தியா குறித்த அதே நாள்தான். கொரோனவுக்கு தடுப்பூசி

கொரோனாவிற்கு நாள் குறித்து விட்டது இரஷ்யா. இனி  போட்டுத்தள்ள வேண்டியதுதானாம். அடுத்த மாதம் வெளியாகிறது கொரோனா தடுப்பூசி என்கிறது இரஷ்யா. உலக நலங்கு அமைப்பு ஏற்குமா என்கிற கேள்வி எழுந்துள்ளது. 

30,ஆனி,தமிழ்த்தொடராண்டு-5122: இந்தியா அவசரகதியில்- இந்திய விடுதலை நாளுக்குள், கொரோனா தடுப்பு மருந்து என்று அறிவித்து, இயல்அறிவர்கள் எதிர்ப்பில் பின்வாங்கி விட்டது. இந்தியாவின் தடுப்பு மருந்துக்கு இன்னும் மூன்;று நான்கு மாதங்கள் ஆகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தாங்கள் உருவாக்கியுள்ள கொரோனா நுண்நச்சுத் தடுப்பூசியை ஏறத்தாழ இந்தியா அறிவித்த இந்திய விடுதலை நாளுக்கு ஒரு நாள் முன்னதாக வெளியிடுவதற்கான நாள் குறித்திருக்கிறது இரஷ்யா.  

இரஷ்யாவின் செச்செனோவ் பல்கலைக்கழக இயல்அறிவர்கள், கொரோனா தடுப்பூசி தயாரிப்பு பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள். இந்தப் பல்கலைக்கழகம், அண்மையில் கொரோனாவுக்குத் தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும், அது மனிதர்களிடம் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகவும், இரஷ்ய இயல்அறிவர்கள் குழு அறிவித்தது. 

செச்செனோவ் பல்கலைக்கழக மையத்தின் தலைவரும், தலைமை ஆராய்ச்சியாளருமான எலெனா ஸ்மோல்யார்ச்சுக், ரஷ்ய செய்தி நிறுவனமான டாஸ்ஸிடம் இதுபற்றி கூறுகையில், தன்னார்வலர்கள் மீதான தடுப்பூசியின் மருத்துவ பரிசோதனைகள் நிறைவடைந்துள்ளதாகவும், ஆய்வுத் தரவுகளை வைத்து பார்த்தால், தடுப்பூசி பலன் தந்துள்ளதாகவும் தெரிவித்தார். அடுத்த முப்பதாவது நாளில் இந்தத் தடுப்பூசி ‘பொதுப் புழக்கத்திற்கு நுழையும்’ என்று தான் நம்புவதாக தெரிவித்துள்ளார். 

இதற்கிடையில், உலக நலங்கு அமைப்பின் நெறிமுறைகள் படி, ஒரு தடுப்பூசி பெரிய அளவிலான உற்பத்திக்கு ஒப்புதல் பெறுவதற்கு முன்னர் மூன்று கட்ட ஆய்வுகளைக் கடக்க வேண்டும். இரஷ்ய தடுப்பூசி ஆய்வை, முதல்கட்டமாகத்தான், உலக நலங்கு அமைப்பு கருதுகிறது. இதுவரை, மூன்றாம் கட்ட சோதனைக்கு உட்படுத்தப்படாமல் பெரிய அளவிலான பயன்பாட்டிற்கு எந்த தடுப்பூசியும் அங்கீகரிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.