19,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: கடந்த ஐந்து மாதங்களாக காணாமல் போனார் சீனாவைச் சேர்ந்த பிரபல நடிகையான பேன்பிங்பிங். இவர் மற்றும் இவர் தொடர்புடைய நிறுவனங்கள் 270 கோடி ரூபாய் வரி ஏய்ப்பு செய்துள்ளதாக, ஜியாங்சு மாகாண வருமான வரி பிரிவு அதிகாரிகள் கண்டுபிடித்ததாகத் தெரிவிக்கின்றனர். எனவே அவர் 670 கோடி ரூபாய் அபராதத் தொகையை சேர்த்து 942 கோடி ரூபாய் செலுத்த வேண்டுமாம், தவறினால் குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் அதிகாரிகள் கூறியுள்ளனர். இதன் அடிப்படையிலா? வேறு ஏதாவது சிக்கல் காரணமா? கடந்த ஐந்து மாதமாக காணமல் போன சீனாவைச் சேர்ந்த பிரபல நடிகையான பேன்பிங்பிங் குறித்து கேள்வி எழுந்துள்ளது. -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,931.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.