Show all

கிம் யோ ஜாங்- 32அகவையில் அதிகாரம்! யானை வரும் பின்னே, மணியோசை வரும் முன்னேவாக பல்வேறு கணிப்புகள்

வடகொரியாவின் இந்திராவா? செயலலிதாவா? பண்டாரநாயகாவா? எல்லாம் இல்லை ஆரவள்ளியா என்றெல்லாம் அளாளுக்கு ஒரு கணிப்பு முன்னெடுக்கப்பட்டு வருகிறது கிம் ஜாங் உன்னின் தலைமறைவும், கிம் யோ ஜாங்குக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரமும்.

18,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5122: வட கொரியாவில் கிம் ஜாங் உன்-னின் சகோதரி கிம் யோவுக்கு முதன்மைப் பொறுப்புகள் அதிகாரப்பாடாக  வழங்கப்பட்டு உள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மர்ம தேசத்தின் அதிபர் என்று அழைக்கப்படும் கிம் அண்மையில் வெளி உலகுக்கு காட்சி அளிக்காததால் அவர் குறித்து பல்வேறு தகவல்கள் உலா வருகின்றன. இந்த நிலையில்தான் தற்போது கிம்யோ ஜங்கிற்கு முதன்மைப் பொறுப்பு வழங்கப்பட்டு இருப்பது முதன்மைத்துவம் பெற்றுள்ளது.

கிம் ஜாங் தந்தை மரணபடுக்கையில் இருந்த போது கிம்முக்கு முதன்மைப் பொறுப்புகள் அப்போது வழங்கப்பட்டுள்ளதாம். தற்போதும் அதே முடிவுகள் எடுக்கப்பட்டு கிம்யோ ஜங்குக்கு பொறுப்புகள் வழங்கப்பட்டு இருப்பது அவர் முதன்மைத்துவமான பதவியை நோக்கி நகர்வதற்கான திட்டம் என தெரியவந்துள்ளது.

வடகொரிய அரசியலில் கிம் யோ முதன்மைப் பங்காற்றியுள்ளார். அவர் அமெரிக்க அதிபர் உடன் நடைபெற்ற சந்திப்பை பாதியில் நிறுத்த ஆலோசனை வழங்கியுள்ளார்.

தற்போது கொரோனா தாக்கத்திலும் கூட கிம் ஜாங் குறித்து உலக நாடுகள் இடையே பரவும் பல்வேறு தகவல்களுக்கும் கிம்யோவே காரணம் என கூறப்படுகிறது. கிம் ஜாங்கின் குடும்பத்தினர் மட்டுமே ஆட்சியை தக்கவைக்க வேண்டும் என்ற நோக்கில்தான் தற்போது கிம்யோவுக்கு பொறுப்புகளை அமைச்சரவை வழங்கி இருப்பதாகவும் தெரியவந்துள்ளது.

தற்போது அவருக்கு கிடைத்து இருக்கும் சிறப்புத் தகுதி மூலம் கிம் ஜாங்கின் மறைவுக்கு பின்னர் அதிபராக முடியும் என வட கொரிய சட்ட நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.