Show all

பள்ளிகள் திறப்பு எப்போது!

மாணவர்களின் பாதுகாப்பு முழுமையாக உறுதி செய்யப்பட்ட பின்னரே பள்ளிகள் திறக்கப்படும் என்று கல்வித்துறை தெரிவித்துள்ளது.

18,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5122: மாணவர்களின் பாதுகாப்பு முழுமையாக உறுதி செய்யப்பட்ட பின்னரே பள்ளிகள் திறக்கப்படும் என்று கல்வித்துறை தெரிவித்துள்ளது.

கொரோனா பரவல் எதிரொலியாக நாடு முழுவதும் கல்வி நிலையங்கள் மூடப்பட்டு உள்ளன. தேர்வுகள் இரத்து செய்யப்பட்டுள்ளன. மீண்டும் எப்போது கல்வி நிலையங்கள் தொடங்கப்படும் என்று தெரியவில்லை.

தமிழகத்தில் 10ம் வகுப்பு தேர்வு இன்னும் நடக்கவில்லை. 12ம் வகுப்பு தேர்வுகள் கிட்டத்தட்ட முடிந்து விட்டாலும், தேர்வுத் தாள்கள் திருத்தும் பணி இன்னும் தொடங்கவில்லை.

ஆகையால் தேர்வு முடிவுகள் எப்போது வெளிவரும் என்று தெரிய வில்லை. இந்நிலையில் பள்ளிகள் மீண்டும் திறக்கப்படுவது எப்போது என்பது குறித்து கல்வித்துறை அதிகாரிகள் ஆலோசனை நடத்தியதாக தெரிகிறது.

அநேகமாக ஜூன் இறுதியில் திறக்கப்படும் வாய்ப்புகள் அதிகம் இருக்கின்றன. நடுவண் அரசு நாடு முழுவதும் பள்ளிகளை திறக்க சொல்லி அறிவுறுத்தும் வரை பள்ளிகளைத் திறக்க வாய்ப்பில்லை என்று கல்வித்துறை அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.

ஆனாலும் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு இல்லாத மாவட்டங்களில் மட்டுமாவது ஜூன் மாதம் பள்ளிகளை திறக்கலாமா, வேண்டாமா என்பது குறித்து கல்வித்துறை ஆலோசனை செய்து வருவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.