பைசர் நிறுவனத்துடனான கொரோனா தடுப்பூசிக்கான ஒப்பந்தத்தில் பக்க விளைவுகளுக்கு நாங்கள் பொறுப்பல்ல என்றால்- பொருளுக்குப்பொறுப்பும் (கியாரண்டி) பழுதுக்குப்பொறுப்பும் (வாரண்டி) இல்லாத கொரோனா தடுப்பூசி வணிகத்தை கேள்விக்குள்ளாக்குகிறார் பிரேசில் அதிபர். அதாவது கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டதால் மனிதர்கள் முதலையாகவோ, பெண்களுக்கு தாடி வளர்ந்தாலோ, ஆண்களின் குரல் பெண்களை போல மாறினாலோ பைசர் நிறுவனம் பொறுப்பாகாதாம். பைசர் நிறுவனத்துடனான கொரோனா தடுப்பூசிக்கான ஒப்பந்தத்தில் பக்க விளைவுகளுக்கு நாங்கள் பொறுப்பல்ல என்றால்- பொருளுக்குப்பொறுப்பும் (கியாரண்டி) பழுதுக்குப்பொறுப்பும் (வாரண்டி) இல்லாத கொரோனா தடுப்பூசி வணிகத்தை இப்படித்தான் புரிந்துகொள்ள வேண்டியிருக்கிறது என்கிறார் பிரேசில் அதிபர். ஆகையால் கொரோனா தடுப்பூசி போடுவது உங்கள் விருப்பம். நான் இந்த தடுப்பூசியை போடமாட்டேன் என பேசியிருக்கிறார். உலக நாடுகளைப் போல பிரேசில் நிறுவனங்களும் கொரோனா தடுப்பூசி தயாரிப்பு, கொள்முதலில் தீவிரமாக உள்ளது. கொரோனா தடுப்பூசி போடும் திட்டத்தையும் பிரேசில் தொடங்கி உள்ளது. ஆனால் பிரேசில் அதிபர் போல்சனாரோ, கொரோனா தடுப்பூசியின் வணிகநெறியின்மைக்கு எதிராக கருத்துகளை வெளியிட்டுள்ளார்.
06,மார்கழி,தமிழ்த்தொடராண்டு-5122: கொரோனா தடுப்பூசி தயாரிக்கும் அமெரிக்காவின் பைசர் நிறுவனத்துடன் பிரேசிலும் ஒப்பந்தம் செய்திருக்கிறது. இந்த ஒப்பந்தம் தொடர்பாக பேசிய போல்சனாரோ, பைசர் நிறுவனத்துடனான ஒப்பந்தத்தில் பக்க விளைவுகளுக்கு நாங்கள் பொறுப்பல்ல என அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
உலக நாடுகளில் மொத்த கொரோனா பாதிப்பில் அமெரிக்கா, இந்தியாவை தொடர்ந்து 3-வது இடத்தில் இருக்கிறது பிரேசில். இந்த நாட்டில் இதுவரை மொத்தம் 72,13,155 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா மரணங்களில் உலக நாடுகளில் அமெரிக்காவுக்கு அடுத்ததாக பிரேசில் உள்ளது. பிரேசிலில் இதுவரை 1,86,356 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர்.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



