சமஸ்கிருதத்தில் பிர என்று தொடங்கி பயன்பாட்டில் இருந்து வரும் ஏராளமான சொற்களை, தமிழாகவே நாம் பெரிதும் பயன்படுத்தி வருவது ஏன் என்ற கேள்விக்கான விடை இந்தக் கட்டுரை. தமிழில் வழங்கும் பெரு என்கிற அடைமொழி சொல்லின் திரிந்த வடிவமே ‘பிர’ ‘ப்ர’ என்றவாறான சமஸ்கிருதத்தின் பலநூறு சொற்களின் முன்னொட்டு ஆகும். பெரு என்பது (ஒன்றின்) உயர்ந்த நிலை, மேன்மை, புகழ் பாராட்டும் பொருள் கொண்டது, சிறப்பினை உணர்த்துவது. பெருமை, பெருமிதம் போன்ற சொற்கள் இவ்வாறாக அமைந்த வையே! பெருமை: தான் அல்லது தன்னைச் சார்ந்தோர் அடைந்த உயர்நிலை, வெற்றி, பெற்றிருக்கும் நல்ல பண்பு முதலியவற்றைக் குறித்து ஒருவருக்கு மகிழ்ச்சியையும் மதிப்பையும் தரும் உணர்வு. தஞ்சையில் கட்டமைக்கப்பட்ட கோயில் மூலவரின், பெருவுடையார் என்ற பெயரே பிரகதீஸ்வரர் என உருமாற்றி வழக்கப்படுத்தப் பட்டமையில் இருந்து நமது ஆய்வைத் தொடங்கலாம். இந்த பெரு என்கிற சொல் தென்அமெரிக்கா வரை சென்றுள்ளதை மீ.மனோகரன் என்ற நூலாசிரியர், தென் அமெரிக்காவின் சோழர்கள் என்ற தமது நூலில் அமெரிக்காவில் உள்ள பெரு நாட்டைப் பற்றி குறிப்பிடுவார். பெரு மாலே பிரம்மா ஆனது. இவ்வாறு நாம் அரைத்து, கலந்து வைத்த மாவினை, நம்மிடமிருந்து களவாடி, அதைக் கொண்டு நமக்கே மேலும் பல புதிய வடைகளைச் சுட்டு வழங்கினர் பார்ப்பனியர் என்பதே பிர என்ற சொல்லை தொடக்கமாக கொண்ட பலநூறு சொற்களின் அடிப்படையாகும். இப்படி பிரதமர், பிரம்மாதம், பிரம்பு, பிரசவம், பிரவாளம், பிரச்சனை, பிரகடனம், பிரகாசம், பிரகாரம், பிரகிருதி, பிரசண்டம், பிரசங்கம், பிரசன்னம், பிரச்சாரம், பிரசுரம், பிரணவம், பிரயோகம், பிரதானம், பிரதாபம், பிரதி, பிரதானி, பிரதானம், பிரதிட்டை, பிரதிநிதி, பிரதியுபகாரம், பிரதேசம், பிரதிவாதி, பிரபந்தம், பிரபு, பிரமகத்தி, பிரமச்சரியம், பிரமசூத்திரம், பிரயத்தனம், பிரமி, பிரமை, பிரமோற்சவம், பிரயாசம், பிரயாணம், பிரவேசம், பிரளயம், பிரத்தியார் இப்படி பல நூறு சொற்களையும் இந்த அடிப்படையில் பட்டியல் இடலாம்.
06,மார்கழி,தமிழ்த்தொடராண்டு-5122: சமஸ்கிருதத்தில் பிர என்று தொடங்கி பயன்பாட்டில் இருந்து வரும் ஏராளமான சொற்களை, தமிழாகவே நாம் பெரிதும் பயன்படுத்தி வருவது ஏன் என்ற கேள்வி எனக்கு நீண்டகாலமாகவே இருந்து வந்தது. தொடர் தேடலில்தான் அதற்கான அடிப்படை என்ன என்கிற தெளிவான தகவல் எனக்குக் கிடைத்தது அதை பகிர்ந்து கொள்வதற்கானதே இந்தக் கட்டுரை.
பெரு சித்தியே பிரசித்தி ஆனது.
பெரு சாதமே பிரசாதம் ஆனது.
பெரும் அண்டமே பிரமாண்டம் ஆனது.
பெரும் பஞ்சமே பிரபஞ்சம் ஆனது
பெரும் வலம் பிரபலம் ஆனது.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



