Show all

தெளிவுபடுத்தும் கோட்டாபய ராஜபக்ச! சிறுபன்மை மக்களான ஈழத்தமிழர்களுக்கு அதிகார பகிர்வு சாத்தியமில்லையாம்

இலங்கையில் தமிழர்களுக்கு அதிகார பகிர்வு வழங்குவது நடைமுறை சாத்தியமற்றது என அதிபர் கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார். 

02,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5121: பெரும்பான்மை சிங்கள மக்களினால் நிராகரிக்கப்படும் அதிகார பகிர்வு, கூட்டாட்சி போன்ற கருத்துருக்களை, சிங்களவர் அனுமதியின்றி, எவ்வாறு தமிழர்களுக்கு வழங்குவது என கோட்டாபய ராஜபக்ச கேள்வி எழுப்பியுள்ளார். இது ஈழத்தமிழர்களுக்கு மிக மிக தெளிவாகப் புரிந்த கருத்துருதான். இதைப் புரிந்து கொள்ள வேண்டியது- ஈழத்தமிழர்களை அமைதிப் படுத்தும் கருத்துப்பரப்புதலையே எப்போதும் முன்வைக்கிற இந்தியா மற்றும் இலங்கைக்கு கண்ணை மூடிக் கொண்டு ஆதரவளிக்கிற நாடுகளே.

அதிகார பகிர்வு என்ற கருத்துருவானது முற்றிலும் பொய்யான ஒன்று என கூறியுள்ள அவர், பெரும்பான்மை சிங்கள மக்கள் இருக்கின்ற நாட்டை பிரித்து அதிகார பகிர்வை வழங்குவதென்பது சாத்தியமற்ற ஒன்று எனவும் தெரிவித்துள்ளார்.

தமிழ் மக்களின் வாக்குகள் இன்றி தான் அதிபர் ஆகியுள்ள போதிலும், தான் அனைவருக்கும் இந்த நாட்டின் அதிபர் எனவும் கோட்டாபய ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.

யுத்தக் காலத்தில் காணாமல் போயுள்ளதாக கூறப்படுவோருக்கு காணாமல் போனோர் தொடர்பான சான்றிதழ் வழங்குவதே சிறந்ததொரு தீர்வாக இருக்கும் என தான் நம்புவதாக அதிபர் கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

வடக்கில் மாத்திரமன்றி, தென் பகுதியிலுள்ள பலர் காணாமல் போயிருந்ததை அவர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.

யுத்தத்தில் காணாமலானோர் உயிரிழந்திருக்கலாம் என கூறிய அவர், அதனை அவர்களின் பெற்றோரினால் ஏற்றுக் கொள்ள முடியாது என்பதையும் உணர முடிவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதனாலேயே காணாமல் போனோர் உறவினர்கள் போராட்டங்களை நடத்தி வருவதாக கூறிய அவர், காணாமல் போனோருக்கான சான்றிதழை வழங்குவதே சிறந்ததாக அமையும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இந்;தியா போன்ற நாடுகள், தமிழர்களை முதுகில் குத்துவது எப்படி என்று கற்றுக் கொடுத்தவாறே, இதுவரை ஆண்டிருந்த சிங்களப் பேரினவாத ஆட்சியாளர்கள் முன்னெடுத்து வந்த நிலையில், கோட்டாபய ராஜபக்ச- அதிகாரப்பகிர்வு, கூட்டாட்சி எல்லாம் ஈழத்தமிழர்களுக்கு சாத்தியமில்லை என்று  தமிழர்கள் நெஞ்சில் குத்தியிருப்பதில் ஈழத்தமிழர்கள் மகிழ்ச்சியே அடைவார்கள். சிங்களப்பேரினவாதிகள் தமிழர்களுக்கு எந்த உரிமையும் தரமாட்டார்கள் என்பதை உலகினருக்கு உணர்த்தி, தங்கள் வழியை தாங்கள் பார்த்துக் கொள்ள ஈழத்தமிழர்களுக்கு நல்லதொரு வாய்ப்பாகவே இது அமையும். 

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல, தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,369.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.