நான் திடீர் பணக்காரி ஆகிவிட்டேன். அந்தப் பணம் எங்களுக்கு சொந்தமானது அல்ல என்று தெரிந்தாலும் அதை நினைத்து பகல் கனவு கண்டுகொண்டிருந்தேன். பணத்தின் சில பகுதியை மனைவாங்கிப் போட பயன்படுத்தலாம் எனத் திட்டமிட்டிருந்தேன் என்றார் ரூத் பலூன். 02,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5121: தன்னுடைய வங்கிக் கணக்கில் மீதத்தொகை மற்றும் பணப் பரிவர்த்தனை ஆகியவற்றை சரிபார்க்க தனது செல்பேசியில் வங்கிசெயலியை திறந்து பார்த்தவருக்கு காத்திருந்தது எதிர்பாராத அதிர்ச்சி. ஆம் தன்னுடைய கணக்கில் மூன்று கோடியே எழுபத்தி இரண்டு இலட்சத்து மூவாயிரத்து முன்னூற்று முப்பத்தி ஏழு டாலர் பணம் இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார் ரூத் பலூன். தென்அமெரிக்காவிலுள்ள டல்லாஸ் நகரில் வசித்து வரும் ரூத் பலூன், இதுதொடர்பாக ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், ‘நான் திடீர் பணக்காரி ஆகிவிட்டேன். அந்தப் பணம் எங்களுக்கு சொந்தமானது அல்ல என்று தெரிந்தாலும் அதை நினைத்து பகல் கனவு கண்டுகொண்டிருந்தேன். பணத்தின் சில பகுதியை மனைவாங்கிப் போட பயன்படுத்தலாம் எனத் திட்டமிட்டிருந்தேன் என்று கூறியுள்ளார். தொடர்ந்து பேசிய அவர், நான் டெக்ஸாஸ் வங்கியைத் தொடர்புகொள்ள முயற்சி செய்தேன். தொடர்புகொள்ள முடியவில்லை. என் கணவருக்கு திரைப்பிடிப்பை அனுப்பி இதுபற்றி கூறினேன். பின்னர், என்னுடைய கணவர் டெக்ஸாஸ் வங்கியை அணுகியபோது தவறுதலாக இந்த நிகழ்வு நடந்துவிட்டது என்று தெரிவித்தனர். மூன்று கோடியே எழுபது இலட்சம் டாலர் பணம்;, கிறிஸ்துமஸ் இன்பஅதிர்ச்சியாக இருக்க வேண்டுமென்று விரும்பினேன். கடைசியில் வங்கி ஊழியரின் பிழையாக மாறிவிட்டது’ என்றார் வேதனையுடன். இந்த நிகழ்வு குறித்துப் பேசிய டெக்ஸாஸ் வங்கி நிர்வாகத்தினர், ‘வெளிநாட்டு பணத்தாள்களை பரிவர்த்தனை செய்யும்போது பணமதிப்பு காரணமாக வங்கி ஊழியர்கள் தகவல்களை உள்ளீடு செய்யும் பணியில் ஈடுபடுவார்கள். ஒரு வாடிக்கையாளர் பணத்தைச் செலுத்த வந்தபோது, எங்களுடய பிரதிநிதி தொகையை தட்டச்சு செய்வதற்குப் பதிலாக வங்கிக் கணக்கு எண்ணைத் தட்டச்சு செய்துவிட்டார். இதனால், இந்தத் தவறு நிகழ்ந்துவிட்டது. இதுகுறித்து, வாடிக்கையாளர் எங்கள் கவனத்துக்குக் கொண்டுவந்தபோது இந்த நிகழ்வு தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்பட்டுவிட்டது’ என்று தெரிவித்துள்ளனர். -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல, தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,369.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



