Show all

மாநிலங்களின் குற்றச்சாட்டு! சரக்குசேவை வரியின், மாநிலங்களின் பங்குத்தொகை, கடந்த ஐந்து மாதங்களாக வழங்கப்படவில்லை

இன்று கூடும் சரக்குசேவைவரிக் குழு கூட்டத்தில்- சரக்குசேவை வரியின், மாநிலங்களின் பங்குத்தொகை, கடந்த ஐந்து மாதங்களாக வழங்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டை முன்வைக்க இருந்த நிலையில்- 35,298 கோடி ரூபாய் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளதாக, நேரடி வரி மற்றும் சுங்கத் துறை ஒன்றிய வாரியம் நேற்று அறிவித்துள்ளது.

02,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5121: மாநிலங்களின் அதிகாரங்களை பிடுங்கி நடுவில் குவித்துக் கொள்வதில் குறியாக செயல்பட்டு வருகிறது, ஆட்சிப்;பொறுப்பு கிடைத்தில் இருந்து இந்திய பாஜகஅரசு.

நடைமுறையில் மாநிலங்களின் பொறுப்பில் இருந்த பல்வேறு வரிகள் ஒருங்கிணைக்கப்பட்டு, இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு சரக்குசேவை வரி அறிமுகம் செய்யப்பட்டது. அப்போது, சரக்குசேவை வரி அறிமுகத்தால், மாநிலங்களின் வரிஉரிமை பறிப்பால், மாநிலங்களுக்கு ஏற்படும் இழப்புகள் முறையாக ஈடுசெய்யப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. 

இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை, இந்த இழப்பீட்டு தொகை, மாநிலங்களுக்கு வழங்கப்பட வேண்டும். ஆனால், இந்தாண்டு கடந்த ஐந்து மாதங்களாகவே இந்தத் தொகை வழங்கப்படவில்லை. இந்தத் தொகையை உடனடியாக வழங்கும்படி, பல மாநிலங்கள் வலியுறுத்தி வந்தன. இந்தநிலையில் சரக்குசேவை வரி குழுவின் கூட்டம் இன்று நடக்க உள்ளது. அதில், இந்த குற்றச்சாட்டை எழுப்ப பல மாநிலங்கள் திட்டமிட்டிருந்தன.

இந்த நிலையில், இழப்பீட்டு தொகை, 35,298 கோடி ரூபாய் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளதாக, நேரடி வரி மற்றும் சுங்கத் துறை ஒன்றிய வாரியம் நேற்று அறிவித்துள்ளது. எந்த ஒன்றையும் மக்கள்தாம் போராடிப்பெற வேண்டும் என்ற நிலையைத் தொடர்ந்து, மாநிலங்களும் போராடித்தாம் பெறவேண்டும் என்பதான அன்னிய நிலைக்கு இந்திய சட்ட ஒழுங்கு நிலையை மாற்றியுள்ளது இந்திய பாஜக அரசு. 

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல, தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,369.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.