அரபு நாடுகளிலிருந்து பெட்ரோல் இறக்குமதி செய்து, நடுவண் அரசு மேற்கொள்ளும் பெட்ரோல் வணிகத்தில், பெட்ரோல் உற்பத்தி நாடுகளை விடவும், சந்தைப்படுத்தும் வணிக நிறுவனங்களை விடவும், இந்திய அரசுக்கு இரட்டிப்பு ஆதாயம் இருப்பதை புள்ளி விவரங்கள் காட்டுகின்றன. எனவே இந்தியாவும் கீழ்காணும் வருமான வரியில்லாத நாடுகளின் பட்டியலில் இடம் பெறுவது சாத்தியமே. 02,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5121: உலகில் ஒவ்வொரு நாடும் வருமானம் மிகுதியாக வருகிற தொழிலை தன் கைவசமே வைத்துள்ளன. அதனால் வரி வாங்கி நாட்டை நிருவகிக்க வேண்டிய கட்டாயம் உலகில் எந்த நாட்டிற்கும் இல்லை. வேலை செய்யும் மக்களிடம் இருந்தும், தொழில் செய்யும் நிறுவனங்களிடமிருந்தும் வருமான வரி வாங்குவது அந்த நாட்டின் நிருவாக பொறுப்பின்மையையே காட்டுவதாகும். உலகில் பல நாடுகள் குறைவான வருமான வரி வாங்குதல். ஒரு சில நாடுகளில் வருமான வரி கட்ட வேண்டிய தேவையே இல்லை என்பதான குறைவான பொறுப்பு மற்றும் நிறைவான பொறுப்பான நிருவாகம் அந்த நாடுகளில் முன்னெடுக்கப்படுகிறது. நாட்டு மக்களிடம் வருமான வரி வசூலிக்காமல், வருமான வரி இல்லாத நாடுகளை பற்றி பார்ப்போம். 1. பஹாமாஸ் அழகை கொட்டிவைத்திருக்கும் மனதை கொள்ளைகொள்ளும் அழகிய கடற்கரைகள் மற்றும் வேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரத்துடன் இருப்பதால் அரசு மக்களிடம் வருமான வரி வசூலிப்பதில்லை. பஹாமாஸ் வருமான வரி இல்லாத மிகவும் வாழக்கூடிய நாடுகளில் ஒன்றாகும். இப்போது நாமும் முதலீடு செய்து அங்கு குடியேறலாம். பஹாமாஸ் இல் முதலீடுகளை செய்யாமல் தற்காலிக அனுமதியைப் பயன்படுத்தும் வெளிநாட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கத் தொடங்கியுள்ளது. நீங்கள் நீண்ட காலம் அங்கேயே தங்க விரும்பினால் நிரந்தர வசிப்பிடத்திற்கான தொகையாக குறைந்தபட்சம் 250,000 டாலர் அதாவது இன்றைய இந்திய ரூபாய் மதிப்பில் 1,77,50,000 ரூபாய்க்கு சொத்தை வாங்க வேண்டும். 2. பஹ்ரைன் மேலும் வருமான வரி இல்லாத ஒரு சில நாடுகளில் இதுவும் ஒன்றாகும். இங்கு நகரங்கள் மிகவும் வளர்ச்சி பெற்றுள்ளது. வெளிநாட்டினர்களும் இங்கு வசித்து வருகிறார்கள். பஹ்ரைனில் நீங்கள் நிரந்தர வசிப்பிடத்தை பெறுவது சாத்தியம் என்றாலும், குடியுரிமை பெறுவது மிக கடினம். நீங்கள் தொடர்ந்து 25 ஆண்டுகள் அந்த நாட்டில் வாழ வேண்டும், அரபு மொழியில் சரளமாக பேசத் தெரிந்திருக்க வேண்டும். இன்னும் பல விதிமுறைகள் உள்ளன. இங்கு நிரந்தர வசிப்பிடத்தை வெளிநாட்டினர் பெற 135,000 அமெரிக்கா டாலர்களை அதாவது 94,50,000 ரூபாயை செலுத்த வேண்டுமாம் அல்லது பக்ரைன் கம்பெனியில் 270,000 அமெரிக்கா டாலர்களை அல்லது 1,89,00,000 ரூபாயை நீங்கள் முதலீடு செய்திருக்க வேண்டும் 3. புருனே 4. கெய்மன் தீவுகள் 5. குவைத் இங்கு வெளிநாட்டு குடிமக்கள் மக்கள்தொகையில் மூன்றில் இரண்டு பங்கு உள்ளனர், குவைத் நகரங்கள் அனைத்தும் மிகவும் நாகரீகமாக அற்புதமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. குவைத்தில் நிரந்தர வசிப்பிடத்தை பெறுவதற்கு பொதுவாக குவைத் நாட்டிற்குள் முறையான வேலைவாய்ப்பு பெற்றுஇருக்க வேண்டும். இங்கு முதலீட்டின் மூலம் குடியுரிமை பெறமுடியாது. 6. மாலைத்தீவுகள் மாலத்தீவிலுள்ள செகுசு உணவகங்கள் மூலம் அரசுக்கு அதிக வருமானம் வருவதால் இங்குள்ள மக்கள் வருமான வரி செலுத்த தேவையில்லை. நிரந்தர வசிப்பிடம் கிடைப்பது கடினம் என்றாலும் விடுமுறையை மகிழ்ச்சியாக குதூகலிக்க 3 மாதங்கள் வரை தற்காலிக வசிப்பிடம் அதாவது சொகுசு உணவகம் எனப்படும் அதிக கட்டணம் கொண்ட கடற்கரை வீடுகளில் தங்கலாம். 7. மொனாக்கோ பிரஞ்சு ரிவியராவில் உள்ள இந்த அழகிய நாடு பாதுகாப்பானது மற்றும் ஆடம்பரமானது, ஆனாலும் அதன் குடியிருப்பாளர்களுக்கும் குடிமக்களுக்கும் அரசு வருமான வரி வசூலிப்பதில்லை. நாடு அதிக வருமானம் ஈட்டி வருவதால் இது எதிர்காலத்திலும் வருமான வரி இல்லாத நாடுகளிடையே இருக்கும். இங்கு நீங்கள் குடியிருக்க பல மில்லியன் டாலர்களை செலவிட வேண்டியிருந்தாலும், வசிப்பிட செயல்முறை மிகவும் நேரடியானது, ஏனெனில் இது செல்வந்தர்களின் பிரபலமான இடமாகும். நீங்கள் அங்கு செல்ல நினைத்தால் செல்வந்தர்களின் பட்டியலில் இருந்தாலே போதும். பணக்காரர்களின் சொர்க்க பூமி இது. 8. நவ்ரூ இந்த தீவானது பல அழகான அம்சங்களைக் கொண்டிருந்தாலும், தீவின் பாஸ்பேட் சுரங்கத் தொழில் அதன் பொருளாதாரத்தை அழித்துவிட்டது. கடல் மட்டம் உயர்ந்து வருவதால் இது பசிபிக் பெருங்கடலில் விரைவில் மூழ்கக்கூடும் என சொல்லப்படுகிறது. 9. ஓமன் இங்குள்ள அதிக அளவிலான எண்ணெய் மற்றும் எரிவாயு வால் பெரிய வருமானம் ஈட்டுவதால் இங்குள்ள மக்கள் அரசுக்கு வருமான வரி செலுத்த தேவையில்லை. 10. கத்தார் நாட்டின் எண்ணெய் மற்றும் எரிவாயு வருவாய் காரணமாக அரசாங்கம் வருமான வரி விதிக்காமல் மக்களை மகிழ்ச்சியாக வாழவைக்கிறது சிறிய அளவு இருந்தபோதிலும் நாட்டின் அதிக பொருளாதார வளர்ச்சி காரணமாக கத்தார் உலகிலேயே மிக உயர்ந்த தனிநபர் வருமானத்தைக் கொண்டுள்ளது. மேலும் பலர் இதை மத்திய கிழக்கில் மிகவும் வளர்ந்த நாடாக கருதுகின்றனர். வருமான வரி இல்லாத பெரும்பாலான நாடுகளைப் போலவே, வெளிநாட்டினருக்கும் நிரந்தர வசிப்பிடத்தை அடைவது இங்கு கடினம், தகுதி பெறுவதற்கு கூட, நீங்கள் 20 ஆண்டுகளுக்கும் மேலாக நாட்டில் வாழ்ந்திருக்க வேண்டும், அரபு மொழியை நன்றாக பேசத் தெரிந்திருக்க வேண்டும். 11. சோமாலியா ஆனால் சோமாலியா உள்நாட்டு போர் காரணமாக நிலையான அரசு இல்லாமல் போராளிகள் கிளர்ச்சி குழுக்களின் தேசமாக இருக்கிறது. இங்கு யாரும் வாசிக்க முடியாத நிலையில் தற்பொழுது இருக்கிறது. 12. ஐக்கிய அரபு நாடுகள் வளைகுடா நாடுகளில் இந்த நாடு வாழ்வதற்கும் முதலீடு செய்வதற்கும் ஏற்ற ஒரு நாடு. ஐக்கிய அரபு அமீரக அரசாங்கம் வெளிநாட்டு முதலீட்டை வெளிப்படையாக ஊக்குவிக்கிறது, துபாய் போன்ற நகரங்கள் தொழில் முனைவோர் அதிகம் முதலீடு செய்யும் அழகு நகரங்கள். பல பணக்காரர்கள் சமூக தகுதி கொண்டவர்கள் இங்கு வீடு வாங்குவதில் மும்மூரம் காட்டுகின்றனர். மற்ற வளைகுடா நாடுகளை விட ஐக்கிய அரபு எமிரேட்ஸில் வசிப்பதும் எளிதானது. வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கான நிரந்தர வசிப்பிட திட்டம் இல்லை என்றாலும் எளிதான நுழைவு அனுமதிக் கொள்கைகள் இங்கு செல்லவும் எளிதாகி வருகின்றன. 13. வானுவாட்டு அங்கு பயணம் செய்வது உங்கள் நேரத்தை அதிகம் வீணடிக்கும். மேலும் விமான பயண செலவும் மிக மிக அதிகம். இருந்தாலும் நல்ல ஒரு சுற்றுலா அனுபவத்தை பெற இங்கு சென்றாக வேண்டும். வருமான வரி இல்லாத நாடுகளில் பெரும்பான்மையான நாடுகளில் சுற்றுலா முதன்மையாகவும், இயற்கை எரிபொருள் வளம் இரண்டாவதாகவும் அமைகிறது. இந்தியாவைப் பொறுத்த வரை இரண்டுக்கும் தகுதியான நாடுதான். ஏனென்றால் அரபு நாடுகளில் இருந்து வாங்கும் பெட்ரோலை மூன்று பங்கு விலைக்கு வரி விதித்து ஏராளமான இலாபம் ஈட்டுகிறது. மேலும் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் மூலமான எல்லையில்லா வருமானம், சாலை வரிவருமானம், காப்பீட்டு நிறுவனங்களுக்கான அனுமதியில் வருமானம், கார்ப்பரேட்டு நிறுவனங்களிடமிருந்து வருமானம் நிறைய வருமானங்கள் இருக்கின்றன. தற்போது சரக்குசேவைவரி வருமானம் சிறப்பான வருமானமாக அமைந்துள்ளது. சுற்றுலாவைப் பொருத்தவரை, சுற்றுலாவை நேர்மையாக முன்னெடுக்காமை மற்றும் ஹிந்துத்துவா வெறித்தனம், மதம் மற்றும் அரசியல் காரணங்கள் பற்றி அயல் நாட்டினரை சுற்றுலாவிற்கு கவரும் முயற்சியை முன்னெடுக்காமல் இருக்கிறது. மேலும் இந்தியாவில் முன்னெடுக்கப்படுகிற வருமான வரியே இந்தியாவின் பொருளாதார முன்னேற்றத்திற்கு தடையாக இருக்கிறது. வருமான வரித்துறைக்கும், அது சார்ந்த வாதம் வம்பு வழக்குகளுக்கும், வாங்கும் வருமான வரியை விட அதிகமாக செலவிடுகிறது இந்தியா. அதிகாரிகள், அரசியல்வாதிகள் மட்டுமே நிறைய ஆதாயம் அடைகின்றனர். மேலும் இந்தியாவில் தொழில் செய்து- வருமானம் வந்து விட்டால், என்னசெய்வது? என்ற அச்சத்தோடே தொழில் செய்ய வேண்டியிருப்பதால், பெரும்பாலானோர் அக்கடா என்று கார்ப்பரேட்டுகளிடம் நிருவாகக் கூலியாகவோ உடலுழைப்புக் கூலியாகவோ தஞ்சமடைய விரும்புகின்றனர். தாய்மொழிவழிக் கல்வி பேணப்படாமல் கல்வித்துறையில் வெட்டி அரசியல் முன்னெடுக்கப்படுவதால், தொழில் வணிகத்திற்கான கல்விக்கு இந்தியாவில் வாய்ப்பேயில்லை. பணம் இருப்பதாக காட்டுவதற்கே அஞ்சி பெரும்பாலானோர் வங்கித் தொடர்பைத் தவிர்த்தே வருகின்றனர். அப்படி தவிர்த்தவர்கள் பணமும் தொழிலும் பணமதிப்பிழப்பில் நிறைய வீணடிக்கப்பட்டது. வருமான வரிஇல்லாமல், இந்தியாவில் நேர்மையான நிருவாகத்தை முன்னெடுத்தால், இந்த அத்தனை நாடுகளை விடவும் பொருளாதார வளமும், வாழத்தகுதியுமான நாடாக இந்தியா அமைய முடியும் என்பது மறுக்க முடியாத உண்மை.
உலகின் மிகவும் பிரபலமான சுற்றுலா தலங்களில் ஒன்றான பஹாமாஸ் எப்படி இந்த நாட்டில், மக்கள் வருமான வரி கட்ட தேவையில்லை என்பதை பார்ப்போம்
பாரசீக வளைகுடாவில் நிலத்தில் எண்ணெய் கண்டுபிடித்த முதல் மாநிலங்களில் பஹ்ரைன் ஒன்றாகும். இந்த எண்ணெய் கண்டுபிடிப்பு இதை உலகின் பணக்கார நாடுகளில் ஒன்றாக மாற்றியுள்ளது.
மலேசிய தீவான போர்னியோவில் உள்ள இந்த சிறிய தீவில் கச்சா எண்ணெய்வளம் அதிக அளவில் உள்ளதால் இங்குள்ளவர்கள் வருமான வரி செலுத்த தேவையில்லை. வெளிநாட்டினர் இங்கு நிரந்தர குடியிருப்பு மற்றும் குடியுரிமை வாங்குவது மிகவும் அரிதான ஒரு விசயம்.
பஹாமாஸைப் போலவே, கெய்மென் தீவுகளின் அழகிய கடற்கரைகளும் வருமான வரி தேவையில்லாமல் தனது அரசாங்கத்தை நடத்த தேவையான சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கின்றன. பெரும்பாலான கரீபியன் நாடுகளைப் போலவே, நீங்கள் அதிக பணம் முதலீடு செய்தால் எளிதாக நிரந்தர வசிப்பிடத்தை பெறலாம்.
இந்த பட்டியலில் உள்ள பல வளைகுடா நாடுகளைப் போலவே, குவைத் அதிக அளவில் எண்ணெய் வளம் கொண்டுள்ளதால் இங்குள்ள மக்கள் வருமான வரி செலுத்தத் தேவையில்லை.
இது சோழர் காலத்தில் தமிழர்கள் தீவாக இருந்தது. இன்று இங்கு முகமதியர்கள் பெரும்பான்மையாக உள்ளனர். வருமானத்தில் ஒரு காசு கூட வரி செலுத்தாமல் கடல் நீருக்கு மேல் கட்டப்பட்டிருக்கும் சொகுசு மாளிகையில் வாழ்வதை கற்பனை செய்து பாருங்கள். தென் பசிபிக் பகுதியில் உள்ள ஒரு சிறிய தீவு நாடான மாலைத்தீவில் உங்களிடம் அதிகம் பணமிருந்தால் நீங்கள் அதைச் செய்யலாம்.
உலகின் சிறந்த வரி இல்லாத நாடுகளில் ஒன்றான மொனாக்கோவின் அற்புதமான சூழலியல் உங்கள் கண்ணை கவரும் விதமாக உள்ளது.
நவ்ரூ மைக்ரோனேசியாவில் உள்ள ஒரு சிறிய தீவு நாடு, இது முதலில் ஐரோப்பிய மாலுமிகளால் “இனிமையான தீவு” அதாவது என்று பெயரிடப்பட்டது. இங்கு அரசு மக்களிடம் வருமான வரி வசூலிப்பதில்லை
இந்தப் பட்டியலில் உள்ள பெரும்பாலான மத்திய கிழக்கு நாடுகளைப் போலவே ஓமன் ஒரு மிகப்பெரிய செல்வந்த தொழில்முனைவோர் நாடு.
கத்தார் இது ஒரு சிறிய, பணக்கார நாடு, இது எண்ணெய் துறையின் மூலம் தனது செல்வத்தை ஈட்டுகிறது. அதன் கலாச்சாரம் மிகவும் பழமைவாதமானது
சோமாலியா வருமான வரி இல்லாத நாடு. அனால் ஒரு வேறுபாடு மற்ற நாடுகள் பொருளாதாரத்தில் மிக முன்னேறிய நிலையில் உள்ளது.
ஐக்கிய அரபு நாடுகள் அதன் பெரும்பாலான அண்டை நாடுகளைப் போலவே எண்ணெய் ஏற்றுமதியிலிருந்து ஏராளமான பணம் சம்பாதிக்கிறது, இதனால் அங்குள்ள குடிமக்கள் வருமான வரி செலுத்த தேவையில்லை.
பல தீவு நாடுகளைப் போலவே வானுவாட்டு அரசாங்கத்தை சிறப்பாக நடத்த சுற்றுலா வருவாயை நம்பியுள்ளது.
வரி இல்லாத சில நாடுகளில் இதுவும் ஒன்றாகும். இங்குள்ள மக்களுக்கு வருமான வரி இல்லை. அதிக சுற்றுலாப்பயணிகள் வருவதால் அரசை வழிநடத்த நல்ல ஒரு வருமானம் கிடைக்கிறது. முதலீட்டு திட்டத்தின் மூலம் வனாட்டுவின் குடியுரிமை பெறுவது எளிது. வனுவாட்டுக்கு செல்வதில் ஒரே ஒரு சிரமம் என்னவென்றால் அங்கு சென்று சேரும் பயண தூரம்தான் .
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



